
பிறந்தோமே இடையினராக
எங்கள் சிறகுகள் யார் கையில் ?
படைத்தான் கலவையாக
எங்கள் விடியல் எப்போது ?
பெண் சாரம் முழுக்க மறைத்துக்கொண்டு
நடித்துப் பிழைக்க பிறந்தோமா ?
நியாயத்தீர்ப்பு நாளில் கூடப்
பிரித்துப்பார்க்கப் படுவோமா ?
உணர்வை உயிரில் புதைத்த எங்கள்
மானம் மறைக்க வழியுண்டா ?
அம்மா…என்ற சொல்லை ஒருமுறை
கேட்டு ரசிக்கும் வரம் உண்டா ?
இருட்டில் ஒண்டி ஒதுங்கி வாழ்கிறோம்
தீக்குச்சி ஒளி கூட துணை இல்லையே
கருணையையும் யாசகத்தையும் மட்டுமே பார்த்த நாங்கள்
உரிமையின் இன்பத்தை இன்னும் சுவைக்கவில்லையே.
கவிஞர்: பவித்ரா முதல் ஆண்டு E&I .