மாலை மர்மங்கள் – அத்தியாயம் 8

 

 

இதுவரை :

 

தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா சுட்டுக் கொல்லப்பட்டார்.வழக்கு துப்பறியும் அதிகாரி சதுர் கைகளுக்குச் சென்றது . அவர் ஷ்ரவனிடமும் அவன் குடும்பத்தினரான மைதிலி, விநாயக், நந்தினி ஆகியோரிடமும் தன் விசாரணையை நடத்தினார். அடுத்து சுதா இல்லத்தின் காவலாளியை விசாரிக்க , மைதிலி மீதான சந்தேகம் அதிகரிக்கிறது. சுதா வீட்டில் மறு ஆய்வு நடத்த இரத்தம் படிந்த கத்தியும் அவள் இன்னொருவனுடன் இருக்கும் புகைப்படமும் கிடைக்கிறது. அது தொடர்பாக ஷ்ரவனை விசாரிக்கச் செல்ல, அவன் பழைய நண்பன் செம்பியன் மூலம் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்கின்றன. வீடு திரும்பும் சதுர் யாரோ உள்ளே இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்.

 

அத்தியாயம் 8:

 

சதுர் தன் வீட்டினுள் வேகமாய் நுழைந்தார். தன் கண்ணால் கண்டதை நினைத்து வியந்து ஆச்சரியப்பட்டார்.

 

 

“திரு துப்பறிவாளரே , நீங்கள் எங்கு இருந்தீர்கள் ?” அவள் கேட்டாள்.

 

 

“ நீ இங்கு வரும் முன் எனக்கு போன் செய்ய வேண்டும் என்று சொன்னேன் அல்லவா ?”, என்றார் சதுர் அவள் கேள்வியைப் புறக்கணித்துவிட்டு.

 

 

“ எந்த பிணத்துடன் தாங்கள் பொழுது போக்குவீர்கள் என்று யார் கண்டது! பிணத்தின் மர்மத்தில் பணம்! ஆகா அற்புதமாய் உள்ளது”, என்றாள் அவள்.

 

 

சதுர் பதில் கூறவில்லை.

 

 

“அற்புதம் உண்மையில் என்னவென்றால் உங்கள் முகம் சிரித்தவாறு எனக்கு எப்போதும் நினைவில் இருக்கிறது. இதன் அற்புதத்தைத் தாங்கள் விளக்க முடியுமா ? “

 

 

“ அது, நிச்சயம் விளக்கக் கூடிய ஒன்று தான் “, மகிழ்ச்சியிலும் வெட்கத்திலும் சொற்களைத் தாறு மாறாய் உச்சரித்தார்.

 

 

வீடு ஒழுங்காய் இருந்தது . அவள் வீட்டில் இருப்பதால், இருட்டாய் பொருட்கள் முறையின்றி இருக்கும் அவர் வீடு , ஒளியின் வெளிச்சத்துடன் சொர்க்கம் போல் ஆனது. அன்பு இருக்கும் இடத்தில் எல்லாம் சரியாகத் தானே இருக்கும்.

 

 

அவள் தான் சதுரின் அன்பு மனைவி காயத்ரி.தற்போது அவள் நிறை மாத கர்ப்பிணியாய் இருந்தாள்.

 

 

“ வழக்குகளை அசால்ட்டாய் எதிர் கொள்ளும் சதுர் நாத்தா என்னிடம் இப்படி உளறுவது ?”

 

 

“மண வாழ்க்கையே மணாளனின் பாக்கியம். ஆனால் என்ன செய்வது உன் முன்னால் என் வித்தைகளைக்  காண்பிக்க முடிவதில்லை”.

 

 

அச்சமயத்தில் காயத்ரிக்கும் அவள் கருவில் வளரும் குழந்தைக்கும் சதுரின் அன்பும் அனுசரிப்பும் தேவைப்பட்டன. ஆனால் விதியோ கடமையின் பிடியில் அவரைத் தள்ளிவிட்டது.

 

” பசி வயிற்றைக் கிள்ளுகிறதே. சாப்பிட்டுக்கொண்டே பேசலாமா காயு ”

 

 

“ சரி வாருங்கள். குட்டி சதுரும் என் உணவு எங்கே என்று கேட்கிறான்”, என்று காயத்ரி தன் வயிற்றில் கை வைத்து கூறினாள்.

 

 

சதுர் அன்புடன் அவளை அணைத்துக் கொண்டார். அவனுக்கு காயத்ரி தான் அனைத்தும். தன் பணியும் காயத்ரியும் அவனுக்கு இரு கண்கள் போலவே இருந்தன.

 

 

சுதாவின் வழக்கைப் பற்றி காயத்ரியிடம் சதுர் கூறினார். அவள் இடையில் குறுக்கிடாமல் முழுவதையும் கேட்டாள்.ஈற்றில் சொன்னாள்,

“எனக்கு என்னவோ சுதாவின் நெருங்கிய வட்டத்தில் உள்ள யாரோ தான் இதை செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மேலும் அந்த கொலையாளி எந்தத் தடயமும் விடவில்லையென்றால் ஒன்று அவர் நன்கு திட்டமிட்டு இதைச் செய்திருக்க வேண்டும் இல்லையேல் இழக்க எதுவும் இல்லாத நிலையில் இருந்திருக்க வேண்டும்.”

சிறிது நேரம் கழித்து,

“அந்த சுதாவிற்கு நண்பர்களே இல்லையா என்ன?” என்றாள்.

 

இது குறித்து சதுர் சிந்திக்கலானார்.

 

 

 

 

கிழக்கில் கதிரவன் தோன்றினான்.சதுர் ஷ்ரவனின் மூலம் சுதாவின் கல்லூரித் தோழி சாவித்ரி என்பவளைப் பார்க்க சென்றார். போதையில் இருந்த ஷ்ரவனிடம் அதற்கு மேல் எதுவும் கேட்க இயலவில்லை.

 

 

சாவித்ரியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சதுர் சுதா ஓர் ஆடவனுடன் இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து சில வினாக்களை முன் வைத்தார்.

 

 

“ இது யார் என்று தெரிகிறதா ?”

 

 

நன்குப் பழக்கப்பட்டது போலே சாவித்ரி , “அது ஸ்ரீனிவாஸ் , சுதாவின் முன்னாள் காதலன் ” என்றாள்.

“அவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில் காதலித்தனர்.”

 

 

“அப்புறம் …”

 

 

“ ஸ்ரீனிவாஸினால் சுதாவின் பணத் தேவைகளை நிறைவு செய்ய முடியவில்லை. அதனால் தொழிலதிபரான ஷ்ரவனிடமிருந்து திருமண அழைப்பு வந்தவுடன் அவரை மணந்து கொண்டாள்”

 

 

“அவ்வளவு தானா .. ”

 

 

“ ஆம் , கதையின் முடிவு”

 

 

“ சுதா கொல்லப்பட்டச் செய்தி உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லையா ?”

 

 

சாவித்ரி எதுவும் பதில் கூறவில்லை. கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் மெளனம் குடிக் கொண்டிருந்தது. பின் மெதுவாக தன் கடந்தகால நினைவுகளைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.

 

“அவள் இப்படி ஆண்களைத் தன் சுயநலத்துக்காகப் பயன்படுத்துவது எனக்குப் பிடிக்கவில்லை. அவளிடம் எடுத்துக் கூற முயன்றேன். அதிலிருந்து எங்கள் உறவில் விரிசல் ஏற்பட்டது. அவள் திருமணம் ஷ்ரவனுடன் நடந்த பின்பு என்னிடம் பேசுவதை அவள் முற்றிலும் நிறுத்திவிட்டாள். ”

 

 

“ சரி.அந்த ஸ்ரீனிவாஸ் இப்போது எங்குள்ளான் ?”

 

 

“ நான் அவனின் முகவரி தருகிறேன்”, என்றாள்.

மேலும் சாவித்ரி , “ ஓர் ஆண்டாக நான் ஊரில் இல்லை. நான் என் நண்பர்களைப் பார்த்து பல மாதங்கள் ஆயின. இன்று காலை தான் வந்தேன். வந்தவுடன் வீட்டில் காபி கூட குடிக்க வில்லை. அதற்குள் இப்படி விசாரணையா ?” என்று சற்று வெறுப்புடன் கூறினாள்.

 

சற்று புன்னகையோடு அதற்கு ஃபார்மலாக “தொந்தரவுக்கு மன்னிக்கவும்” , என்று கூறி அங்கிருந்து அகன்றார்.

 

 

 

தன் வீட்டிற்கு சதுர் திரும்பினார். வீட்டிற்குள் நுழையும் முன் ஒரு காவிய உரையாடல் நிகழ்ந்துக் கொண்டிருக்க  சன்னலில் இருந்து அதை பார்க்கலானார்.

 

 

“என் கண்ணே, கட்டிக் கரும்பே , நறுந் தேனே , உன் தந்தை உன்னை மிகவும் நேசிக்கிறார். அது மறுப்பதற்கில்லை.

அவர் பணி அப்படியடா கண்ணே… என்னது  அவர் பேசுவதைக் கேட்டு உனக்கு பயமாய் உள்ளதா , சரி இப்படி வைத்துக் கொள்வோமா , அவர் அது மாதிரி பேசினால் நான் என் வளையல்களை ஆட்டுகிறேன் , நீ உன் காதுகளை மூடிக் கொள் , சரியா ?

 

“ உன்னோடு விளையாட ஒரு நாய்க் குட்டியை வாங்கித் தருகிறேன். அது உன் பொம்மைகள் எங்கு தொலைந்துப் போயிருந்தாலும் அதனை மோப்பம் பிடித்து உனக்கு கண்டறிந்து கொடுத்து விடும். “

 

சதுருக்கு மூளை  வேளை செய்தது. அவர் சட்டென்று வீட்டிற்குள் நுழையாமல், முன் வைத்த காலை பின் வைத்து  திரும்பி விமான நிலையத்திற்குச் சென்றார்.

 

ஸ்ரீனிவாஸ் அப்போது ஊரில் இல்லை . மே 23 அன்று பெங்களூர் சென்றவர்கள் வரிசையில் ஸ்ரீனிவாஸ் பெயர் இடம் பெற்றிருந்தது. பெண் காலணிகள் அணிந்து கொண்டு ஸ்ரீனிவாஸ் ஏன் செல்ல வேண்டும்?

 

பெங்களூர் செல்லும் அடுத்த விமானத்தில் ஒரு டிக்கெட் வாங்கினார். தான் சரியான திசையில் தான் செல்வதாக அவர் மனம் அவருக்குச் சொல்லியது .

 

பெங்களூரில் அவருக்குப் புதிய சவால் காத்துக் கொண்டிருந்தது.

 

மர்மம் தொடரும்…..

 

(படியுங்கள் )

அத்தியாயம் 7

 அத்தியாயம் 9


மாலை மர்மங்கள் எங்கள் பிரத்தியேக குற்ற நாவல் தொடர். எழுதியோர் :  சுவாதி மோகன் , அனிருத் ரமேஷ் (ஆங்கிலம்) மற்றும் அருண் பாலாஜி , க. பவித்ரா , கிஷோர்  (தமிழ்)