என்னவள்

 

 

மதி மயங்கும் மாலை நேரம்
என் வீட்டு சன்னல் ஓரம்
அவள் வந்தாள்,
வசந்தம் வந்தது.
அவள் சிரித்தாள்
வெப்பம் குளிர்ந்தது.
அவள் நடந்தாள்
வானம் வேடிக்கை பார்த்தது
அவள் பார்வையிலிருந்து மறைந்தாள்
என் வானின் சூரியன் மறைந்தது.

 

கவிஞர்:  அருண் பாலாஜி  முதல் ஆண்டு  ECE மாணவன்.