மாலை மர்மங்கள் – அத்தியாயம் 7

 

இதுவரை :

 

தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா சுட்டுக் கொல்லப்பட்டார்.வழக்கு துப்பறியும் அதிகாரி சதுர் கைகளுக்குச் சென்றது . அவர் ஷ்ரவனிடமும் அவன் குடும்பத்தினரான மைதிலி, விநாயக், நந்தினி ஆகியோரிடமும் தன் விசாரணையை நடத்தினார். அடுத்து சுதா இல்லத்தின் காவலாளியை விசாரிக்க , மைதிலி மீதான சந்தேகம் அதிகரிக்கிறது. சுதா வீட்டில் மறு ஆய்வு நடத்த இரத்தம் படிந்த கத்தியும் அவள் இன்னொருவனுடன் இருக்கும் புகைப்படமும் கிடைக்கிறது.அது தொடர்பாக ஷ்ரவனை விசாரிக்கச் செல்கிறார் சதுர்.

 

 

அத்தியாயம் 7:

“சுதா என்னோட செல்லம் டா… அவளை நான் உயிருக்கு உயிரா… “ என்று சொல்லி முடிப்பதற்குள் வாந்தி எடுத்தார் ஷ்ரவன். எல்லோரும் ஒரு க்லாஸ்(glass) இல் மது பானங்கள் அருந்திக் கொண்டு இருந்தனர். ஸைட் டிஷ் இல்லாத குறையாக இவர்களுக்கு ஷ்ரவன் சிக்கி விட்டான். அவர்களுக்கு ஒரே என்டர்டெய்ன்மென்ட் தான். சதுரால் அங்கு நிகழ்வதை ஜீரணிக்க முடியவில்லை.

 

” நீ அவளை ஏன் திருமணம் செய்தாய் என்று எங்களுக்குத் தெரியும் “,என்று மற்றொருவர் சொன்னார். அவர் உயரமானவராகவும், கார்மேகம் போல் சற்று கருப்பானவராகவும் இருந்தார் .

 

பரந்த விரிந்த தோள்களைக் கொண்டு விளங்கினார். அங்கு ஆண்கள், சிரிக்க ஆரம்பித்தார்கள். சதுரால் அவன் கண்களை நம்ப முடியவில்லை.

 

“ டாப் டக்கராக இருக்கானே!!” என்று மனதில் நினைத்துக் கொண்டார். உயரமான மனிதர் செம்பியன் – மாநிலத்தில் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிகுந்த தொழிலதிபர்களுள் ஒருவர்.

 

“சிரிக்காதே … மவனே காலி பண்ணிருவேன் பாத்துக்கோ!!” என்று ஷ்ரவன் ஆத்திரம் அடைந்து கத்தினான்.

 

“இந்த பைத்தியத்தைக் கூட்டிட்டு போங்க பா” என்று ஒரு தொழிலதிபர் கூற ஒரு வெய்ட்டர் ஷ்ரவனை இழுத்துச் சென்றான். மற்றொருவன் “இதுவே எங்களுக்கு வேலையா போச்சு” என்று முனுமுனத்த படி அவ்விடத்தை சுத்தம் செய்தான்.

 

“எனவே என் நண்பர்களே!!!” செம்பியன் கூறினார், “இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், என் மகிழ்சியில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்.” என்று சொல்லியவாறு பின்னர் அவர் படிகளை நோக்கி கம்பீரமான சிங்கத்தைப் போல் பெருமையாக நடந்தார். சதுர் அவரைச் சரியான நேரத்தில் தடுத்தார்.

 

“எக்ஸ்க்யூஸ் மீ”, என்று சதுர் அழைத்தார். அவர் சதுர் முகத்தைக் கூட பார்க்காது நடந்து சென்றவாறு “யெஸ்” என்றார். அவரது குரல் ஆழமாக, இருந்தது , கண்கள் கடலினும் நீலமாய் இருந்தன.

 

“சிறிது நேரம் பேசுவோமா?” என்று சதுர் அந்த பெரிய மனிதனின் முன்னால் நின்றார். “நான் துப்பறிவாளன் சதுர்நாத், சுதாவின் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறவன்”என்றார். செம்பியன் ஏளனமாகப் பார்தார். “செம ஸீன் போடுறானே!” என்று உள்ளுக்குள் சதுர் நினைத்தார்.

 

சதுர் ஆறாவது மாடியில் ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த அறை வெண்மையாகவும், அற்புதமான காற்றோட்டத்துடனும், அமைதியைப் பிரதிபலிப்பதாகவும், அற்புதமாக அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது.

 

தரை கண்ணாடி போன்று இருந்தது மற்றும் இடது சுவர் ஓவியத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வலது சுவரில் ஓர் பெரிய சன்னல் இருந்தது. அது முழு நகரத்தின் காட்சியையும் அளித்தது. செம்பியனின் குணத்தின் பிரதிபலிப்பதாக அறை இருப்பதாய் சதுர் நினைத்துக் கொண்டார்.

 

“ப்லீஸ் டேக் அ ஸீட், சதுர்” என்று அந்த மனிதன் கூறினார். “இந்த அறை அற்பதமாக இருக்கிறது” என்றார் சதுர். “நன்றி. இப்போது நீங்கள் அவளைப் பற்றி என்ன பேச விரும்புகிறீர்கள்?” என்று அவர் கேட்டார். ‘அவளை’ என்று கூறும்போது அந்த அழுத்தம் அவள் மீது கொண்ட கோபத்தைக் காட்டியது.

 

“முதலில், நீங்கள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா??” என்று கேட்க அந்த மனிதன் அதிர்ச்சியடைந்தான். பின்னர் சிரித்தார், “நீங்கள் எப்படி முட்டாள்தனமாக இந்த கம்பெனிக்கு வந்து விட்டு அதன் முதலாளியாகிய என்னிடமே நான் யார் என்று கேட்கிறீர்கள்? நீங்கள் சுதாவின் கொலையாளியைக் கண்டு பிடிக்கப் போகிறீர்களா? ” என்று கூறி சிரித்தார்.

 

சதுர் அதிர்ந்து போனார். அவர் தன்னை முட்டாள் என்று அழைத்தாரா? “இல்லை” சதுர் குறுக்கிட்டார். “நான் கூற வந்தது என்னவென்றால் … உங்களுக்கு ஷ்ரவன் யார்? ”

 

“ஒரு வேடிக்கையான மனிதன்” என்று அவர் கூறிவிட்டு சன்னல் வழியாக நகரத்தைப் பார்தார். ”

 

அவன் … என் முன்னாள் தொழில் பங்குதாரன். முன்னாள் நண்பன் “என்று அவர் கூறி நாற்காலியில் உட்கார்ந்தார்.

 

“எஸ் & சி பற்றி கேள்விப்பட்டீர்களா? நாங்கள் தான் அதை ஆரம்பித்தோம். நாங்கள் தொழிலில் ராஜாக்களாகத் திகழ்ந்தோம். எங்கள் பிரிவுக்குப் பிறகு, நான் சொந்தமாக வேறு நிறுவனத்தைத் தொடங்கினேன்”.

 

“நீங்கள் ஏன் பிரிந்தீர்கள்?”

 

“ அந்த கேவலமான காட்சியை நினைவு கூற வேண்டுமானால் அப்படியே ஆகட்டும்.” சதுர் 8 மணிக்கு போடும் சீரியலைப் பார்பது போல் ஆர்வமாக கவனித்தார். செம்பியனும் பிறகு ஆர்வமானார்.

 

“சுதா ஒரு கூத்தாடி” சதுர் அதைக் கேட்டதும் ஆடி போனார். யாரும் இப்படி அவரிடம் பேசியதில்லை. ”

 

ஆமாம். அவர்கள் ஒருவருக்கொருவர் நேசித்தார்கள் என்று ஷ்ரவன் கூறுவான். ஆனால் எல்லாம் பொய். எனக்கு அவர்களை விடவும் அதிகமாய் அவ்விருவரைப் பற்றியும் தெரியும்.”

 

“ஆரம்பத்திலிருந்து நீங்கள் தொடங்க முடியுமா?”

 

“சரி. நான் ஏற்கனவே வாழ்ந்த அந்த நினைவுகளை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன். ஷ்ரவன் என்னுடைய கூட்டாளி. அவனுக்கு பெற்றோர் கிடையாது, பணம் இல்லை, ஆனால் யோசனைகள் நிறைய இருந்தன. நான் அவனது சிந்தனைகளை விரும்பினேன், இறுதியில் எனக்கு அவனையே பிடித்துவிட்டது. “என் தந்தையின் வழிகாட்டுதலோடு ஒரு வியாபாரத்தைத் தொடங்க நாங்கள் திட்டமிட்டோம். நான் நிதிகளை முதலீடு செய்தேன் மற்றும் அவன் தன் யோசனைகளை முதலீடு செய்தான். எஸ் & சி பலரின் கனவாக மாறியது. வெற்றிகரமான நிறுவனமாக நாங்கள் திகழ்ந்தோம்.வெற்றிக் கனிகளைச் சுவைத்தோம். ஒரு கனியை அனுபவிக்கும் போது விதைகளையும் சுவைக்க நேரிடும். ஆனால் விதைகள் பின்பு அகற்றப்பட வேண்டும், விழுங்கப்படக் கூடாது.”

 

“சுதா அந்த விதையாக இருந்தாள். ஷ்ரவன் பெண்கள் விஷயத்தில் பலவீனமாக இருந்தான். பெண்களுக்காக நிறைய பணம் செலவிட்டான். நானோ பெண்கள் மற்றும் பாலியல் வாழ்க்கையில் மிகவும் ஆர்வம் காட்டவில்லை. ”

 

“ஒரு நாள், அவன் வந்து ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அவளையேத் திருமணம் செய்யப் போவதாகவும் என்னிடம் கூறினான். அவன் அவளை என்னிடம் காட்டினான்.

 

 

அவளை எனக்குத் துளியும் பிடிக்கவில்லை. ஆமாம் … அவள் அழகானவள், ஷ்ரவனின் ஆசைகளுக்குத் தகுதியானவள். ஆனால் அவர்கள் தத்தம் நன்மைகளுக்கு மட்டுமே திருமணம் செய்தார்கள் – ஒருவரின் சிறப்புகளுக்காக ஒருவரை ஒருவர் விரும்பினர். அவள் உறவை வெட்டுமாறு நான் அவனை எச்சரித்தேன். அவன் கேட்கவில்லை. அவளை விளம்பர தூதராய் ஆக்கியபின்னர் எங்கள் கம்பெனி நஷ்மடைந்தது.அவள் தொழிலில் ஒரு பங்கு தாரராக இருக்க விரும்பினாள். ஆனால் அவளது மூளையில் எதுவும் இல்லை. அவளால் என் பணத்தை இழந்தேன். நான் வெளியே வந்தேன்.

 

“செம்பியன் என்டர்ப்ரைஸஸை உருவாக்க எஸ் & சி விட்டு வெளியேறினேன். இதில் என் தந்தை முதலீடு செய்வதை நிறுத்திவிட்டதால், இதை உருவாக்க எனக்கு பல ஆண்டுகள் ஆனது. இப்போது, நான் முதலிடத்தில் இருக்கிறேன். ஷ்ரவனின் நிறுவனம் டாப் டென்னில் கூட இல்லை. ”

 

சதுருக்குக் கிடைத்த இத்தகவல் மிக அதிகம். “அப்போது, ஷ்ரவன் அவளைக் காதலிக்கவில்லை. அவர் அவளைத் திருமணம் செய்தது அவளது அழகிற்காக மற்றும் அவள் அவரை திருமணம் செய்தது பணத்திற்காக.” சதுர் சுருக்கமாகச் சொன்னார்.

 

“ஆம்.” என்று செம்பியன் சொல்லி இடது சுவரில் மது பானங்கள் வைக்க இருந்த ஒரு அமைப்பில் இருந்த ஒரு பானத்தை எடுத்து ரசித்து ருசித்துக் கொண்டிருந்தார்.

 

சதுர் விட்டுச் சென்றபோது, செம்பியன் கடைசியாக கூறியதை நினைவு கூர்ந்தார். “ஒருவேளை, சுதா ஷ்ரவனை ஏமாற்றியிருந்தால் ஷ்ரவன் அதை ஒருபோதும் மன்னிக்க மாட்டான்.”

 

சுமார் இரவு 9 மணியளவில் சதுர் தனது வீட்டிற்கு வந்த பொது, அவர் வீட்டுக் கதவு திறந்துக் கிடப்பதைக் கண்டு, அதிர்ச்சியடைந்தார்.

 

ஒரு நிழல் வீட்டிற்குள் நகர்ந்துகொண்டிருக்கிறது. அவர் அதை எதிர்பார்க்கவில்லை….

 

-மர்மம தொடரும்

 

(படியுங்கள் )

அத்தியாயம் 6

அத்தியாயம் 8

 


மாலை மர்மங்கள் எங்கள் பிரத்தியேக குற்ற நாவல் தொடர். எழுதியோர் :  சுவாதி மோகன் , அனிருத் ரமேஷ் (ஆங்கிலம்) மற்றும் அருண் பாலாஜி , க. பவித்ரா , கிஷோர்  (தமிழ்)