உன் காதோரத்தில்….

 

திருகிய பொழுதிலே உயிர்த்து எழ,
சிற்றுள்ளம் சிதைந்து போனது, உமது
ஒப்பனையை நீ இரசித்தவிதம் கண்டு;
கன்னத்தின் பொலிவை முத்துக்கள்
-மெட்டெடுக்க,
தீண்டிய நொடியில் பூமிதனில்
-வீழ்ந்தனவே!

சிக்கிய கூந்தலால் மோகத்தின் உச்சியில்;
பொன்மேனி இளகியது உன்னை
– உரசியபோது.
சபையில் ஆண்கள் நின்அழகை வர்ணிக்க,
கறுவுடனும் பகையுடனும் துடித்து அசைய;
மும்முடிச்சுகளால் ஆனந்த கண்ணீர்
-கொண்டு,
எமது ஓலத்தைக் கேட்க மறந்தாய்!

தேனிலவிலே உன் சேலை சரிவதற்குள்,
உன்னவன் என்னுயிரைப் பறித்து விட;
மீண்டும் ஒருமுறை உம் காதணியாக
உயிர்பெற காத்திருக்கும் நான்!

கவிஞர் : ம.தினேஷ்  , இரண்டாம் ஆண்டு Automobile மாணவன்