மாலை மர்மங்கள் – அத்தியாயம் 1

 

அத்தியாயம் 1: 
அது ஒரு அமைதியான இரவு.கடிகாரத்தின் முள் இரண்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.பால் நிலா அமுதினைப் பொழிந்துக் கொண்டிருந்தது.மேகங்கள் அழகு நிலவுக்குக் காவல் என்று சூழ்ந்திருந்தன. நாள்காட்டி காட்டிய தேதி 23 – 05 – 98 . அதை ஒரு கை மெதுவாகக் கிழித்தெறிந்தது.
அவர் தான் நமது கதையின் நாயகன், துப்பறியும் அதிகாரி சதுர் நாத்.ஒரு சிறிய வீடு தான் அவருடையது. அலமாரி முழுக்கக் காகிதங்கள், வெட்டிய நாளிதழ்த் துண்டுகள் ,கிழிந்த புத்தகங்கள் , மேசையில் மீந்து போன உணவு .நமக்கு குப்பை போல் தோன்றும் அவை அவர் அறையின் முக்கிய அங்கங்களாக இருந்தன .அவற்றை உற்றுப்பார்த்தபடியே தன் புதிய வழக்கைப் பற்றி ஆழ்ந்த சிந்தனைக்கு சென்றார் சதுர்.
முந்தைய தினம் மாலை . தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா சுட்டுக் கொல்லப்பட்டு வீட்டில் பிணமாகக் கிடந்தார்.சதுர் அங்கே தன் படையுடன் பார்வையிடச் சென்றான்.அனைவரும் அதைத் தற்கொலை என யூகித்த நிலையில் சதுர் மட்டும் வேறு யோசனையில் இருந்தார்.
வீட்டின் முன் இரு பக்கமும் புல் தரை போல் அமைந்திருந்தது .வீட்டின் முன் ஒரு பெண் அணியும் காலணிகள் கிடந்தன.வீட்டின் பின்புறம் சென்றுப் பார்க்கக் கூடிய நிலையில் இல்லை.புல் யாருக்கும் அடங்காமல் நன்கு வளர்ந்திருந்தது .தோட்டக் காரன் தன் கடமையை மறந்து விட்டானோ என்று யோசித்த வண்ணம் சதுர் உள்ளே சென்றார்.
உயிரற்ற நிலையில் சுதாவின் உடல் கிடந்தது.இது ஒரு தற்கொலையாக இருக்கக் கூடும் என்று பணி புரியும் காவலர்கள் ஊகித்தனர். எப்போதுமே புது விதமாய் யோசிக்கும் சதுரின் மனம் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
“துப்பாக்கியால் தற்கொலை செய்ய நினைத்தவள் , எதற்காகக் கையையும் வெட்டிக்கொள்ள வேண்டும் ?” என்று வினவினான் சதுர்.
காவலர்கள் அவள் முழங்கைக்கு மேல் ஒரு வெட்டுக் காயம் இருந்ததை கவனித்தனர். அக்காயம் சில மணி நேரத்திற்கு முன்பு ஏற்பட்டது போல் இருந்தது.
“அந்த காலணிகள் யாருடயது?”
“சுதாவினுடயதாக இருக்கலாம்” என்றார் ஒரு காவலர்.
“அது ஏன் காலணிகள் வைத்து அடுக்கப்பட்டுள்ள அலமாரியில் இல்லை ?
மேலும் இங்கே தனித்து உள்ள காலணிகள் அலமாரியில் உள்ளன போல் இல்லாமல் கிழிந்த வண்ணம் உள்ளன.இது எனக்கு சரியாக படவில்லை ”
அந்த காலணிகளை சுதாவின் கால்களில் வைத்து பொருத்திப் பார்த்தனர்.அவை அவள் கால்களுக்குச் சிறியதாக இருந்தன.
காவலர்களிடம் வீட்டில் உள்ள அனைத்துக் கத்திகளையும் கைரேகைப் பரிசோதனை செய்ய தடயவியல் ஆய்வகத்திற்கு (Forensic Lab) அனுப்புமாறு கூறினான்.
சதுர் நாத் கூர்மையாக கவனிக்கும் திறன் உடையவன்.அவன் தன் பணியில் இதற்கு முன் கடினமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறான். இயற்கையாகவே அவன் எல்லா பொருட்களையும் வேறு கோணத்தில் பார்ப்பவன். இந்த வழக்கும் எளிதில் முடியும் என்று நினைத்தான்.ஆனால் காலமோ வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது…

(படியுங்கள் )

அத்தியாயம் 2

 

மாலை மர்மங்கள் எங்கள் பிரத்தியேக குற்ற நாவல் தொடர். எழுதியோர் :  ஸ்வாதி மோகன் , அனிருத் ரமேஷ் (ஆங்கிலம்) மற்றும் அருண் பாலாஜி , க. பவித்ரா , கிஷோர்  (தமிழ்)