பாரதம் எதை நோக்கி??

“ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் விருப்பங்களையும் கனவுகளையும் தீர்மானிப்பது எது?” இந்த கணத்தில் நேயர்களிடமிருந்து பல்லாயிரம் பதில்கள் படையெடுத்திருக்கும்.அப்படிப்பட்ட பதில்களின் சூழ்நிலையில் எத்தனை இராஜராஜர்கள் இறந்தனரோ … எத்தனை அப்துல் கலாம்கள் அழிந்தனரோ…..”பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளே உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்” என்ற வசனத்தை எத்தனைப் பள்ளிகள் மாணவர்களின் அறிவுப்பசிக்குத் தீனியாக்குகிறார்கள் என்று தெரியவில்லை.

பள்ளிகளைக் குறைசொல்வது ஒரு புறம் இருக்கட்டும் …இதற்குப் பதில் சொல்லவேண்டியது இப்படிப்பட்டக் கல்விமுறையை உருவாக்கியக் கயவர்கள் தான். எப்படிப் பார்த்தாலும் இறுதியில் இயலாமையில் மூழ்குபவர்கள் மாணவர்கள்தான். குழப்பங்களின் பிடியில் சிக்கி தற்கொலை என்னும் தீயில் சிதையத் துணியும் மாணவர்களை நோக்கிக் கேட்கிறேன் …” காமராஜரின் அறிவு ஐன்ஸ்டீனுக்கு உண்டா ?… இல்லை ….ஐன்ஸ்டீனின் அறிவு காமராஜருக்கு உண்டா??” இருவரின் இயல்பும் மாறுபட்டவை என்பதைப் பயிலீரோ ??உங்களைச் சொல்லிப் பயனில்லை …மதிப்பெண்களுக்காக உங்களை மனப்பாடமல்லாவா செய்யவைத்திருப்பார்கள் மாக்கள் !!..

இது போதாது என்று மற்றுமொரு கொடுமை என்னவென்றால்..ஏழை மாணவர்களுக்கோ அரசுப் பள்ளி…நடுத்தரமாணவருக்கு மெட்ரிக் பள்ளி.. கோடீஸ்வரனுக்கு உயர்தரக் கல்வி … சட்டத்தின் முதல் நோக்கம் சமத்துவம் என்றால், “நாட்டின் முதுகெலும்பு கல்வி ” என்று மூச்சுக்கு முண்ணூறு முறை இந்த மந்திரத்தைச் சொல்லும் கல்வியாளர்கள் காட்டிய சமத்துவம் இதுதானா? அடிப்படையிலேயே இப்படி மிகவும் அழுத்தமாக கல்வி வேரூன்றியிருக்க..மருத்துவ நுழைவுத் தேர்வைக் கண்டீர்களே..இது முறைதானா?? இதில் தவறொன்றுமில்லை ..அடித்தளமே ஆட்டம் காணும் பொழுது ஏன் இப்படி ஒரு அநீதி என்று தான் கேட்கிறேன் …. “சாதிகள் இல்லையடி பாப்பா” என்பதைச் சுட்டி இன்னொன்றைக் கேட்க விழைகிறேன் …என்ன செய்வது தமிழையும் அகற்றும் சதி அரங்கேறிக் கொண்டிருக்கிறதே ..

எழுத்தாளர் : விக்னேஷ்.க,  இரண்டாம் ஆண்டு, CT மாணவன்.