பேசும் விழிகள்

துயிலெழுந்தும் உதயனை ஒருபோதும்

                                                   -கண்டதில்லை.

அழகின் வனப்பையும் கண்எதிரே

                                                  -கண்டதில்லை.

கனவை நிஜமாக்கத் துடிப்பவர் நடுவே;

நிகழ்வை கனவாகவே சித்தரித்து

                                                 -வளர்ந்தேன்!

பார்வைப் பொய்த்து தனிமனிதனாக வாழ,

குறைபாட்டை எண்ணி சளித்ததில்லை

                                                -ஒருநாளும்.

உதட்டு வரிகளில் பிறந்த வெவ்வேறு;

ஒலியுடன் ஆழ்ந்த காதல் கொள்ள,

வாகன நெரிசலில் திக்கின்றி நின்றபோது;

வறண்டது மக்களின் மனம்
                                              -என்றுணர்ந்தேன்!

மற்ற உயிர்களிடத்தில் வைத்த அன்பும்;

மறைவிற்கு பிறகு வாழ்தற் பொருட்டும்,

தானம் செய்தேன் எனது உடலுறுப்பினை!

 

கவிஞர் : ம.தினேஷ்  , இரண்டாம் ஆண்டு Automobile மாணவன்