நீண்ட இரவு – கவிதை

 

மதிதன் துயிலில் மருளும் காலம்;

நிலவின் ஒளியில் மிளிரும் தருணம்;

நிழலும் நீங்கி மெய்அது நிறைய;

இரவின் மடியில் சிரம்நான் இடவா!!

கருநிற திடல்கண் ஒளிர்பல உயிர்கள்;

மௌனக் குரலின் விசையாய்த் தென்றல்;

விடியல் வெறுக்கும் விதியில் நான்;

என்மனம் விரும்பும் ஓரு நீண்ட இரவு!!……

கவிஞர் : கா.ரமண அருணாச்சலம் , முதலாம் ஆண்டு ECE மாணவன்