ஒருவனை நம்பியதால் வந்த வினை

 

 

ஒருவனை நம்பினது தவறா ?
நம்பிக்கை
வேர் இல்லா மரமா ?
சில்லறை விளையாட்டுகளால்
நாணயம் இழந்தேன்
ஆற்றா நிலையில் உண்மை உணர்ந்தேன்
காலுண்டு கட்டில்லை
மேகமுன்டு மழையில்லை
ஆனால் எதுவும் செய்ய வில்லை
ஆனாலும் பழி தானே
நன்பெயர் எளிதில் கிட்டிடுமோ ?
நொடியில் வீணடித்து விட்டேன்
சிறகுகள் இருந்தும் பறக்கவில்லல
புகை வந்தும் தீயில்லை
ஏன் இந்த சூழ்நிலை ?
என்னை மாட்டி விட விதி செய்த சதியோ ?

கவிஞர் : அருண் பாலாஜி , முதலாம் ஆண்டு ECE மாணவன்.