சுகமான பயணங்கள் – கவிதை

சில்லென்ற காற்று என் முகத்தை நனைக்க
தடக் தடக் பாடல் என் செவியில் பாய
மின் கம்பங்களை என் விரல்கள் எண்ண
பச்சை வயல்கள் என் கண்களைப் பறிக்க
தேனீர் மணம் என் மூக்கை இழுக்க
போகும் பாதை என் கனவுகளைச் சுமக்க
நினைவுகளின் பாரம் என் நெஞ்சில் கனக்க
சிரிக்கும் பிள்ளையின் முகத்தை ரசிக்க
கவலை மறந்து நானும் சிரிக்க
அழகியப் பெண்ணொருத்தி என் மனதைப் பறிக்க
மாறன் அம்பு என் மார்பைக் கிழிக்க
அவள் என்னைப் பார்த்துச் சிரிக்க
என் மனம் விண்வெளி நோக்கிப் பறக்க
திடீரெனச் சக்கரங்கள் ஓடுவதை நிறுத்த
கதவுகள் திறக்க
ஆரவாரம் அதிகரிக்க
கூட்டத்தோடு கூட்டமாய் என் கால்களும் வெளியேற
எப்போதும் போலவே சீக்கிரம் முடிந்ததுவிட்டது

என் அழகிய இரயில் பயணம் ….

கவிஞர் : பவித்ரா , முதலாம் ஆண்டு Instrumentation மாணவி