வழி தவறி…

செமஸ்டரின் முடிவில்… 

வாழ்வில் சிறந்து விளங்க, கல்வியை
            நோ௧்கி ஒன்றாக பயணித்தோம்.
கடமைகள் கண்எதிரே நிற்க,
                                            -எதிர்காலத்தின்
            அனல் தேகத்தைத் தாக்கியது.
நானும் எனது உடன்பிறவா தோழனும்.

பாதை நெடுகிலும் கிடந்த
                                        -கருவேளங்களை
          ஒன்றுபட்டு களைந் தெறிந்தோம்.
சிற்பியின் உளியைப்போல், அறிவுத்திறன்
                                        – மூலம்,
          குறைகள் முழுதும் நீக்கினோம்.

தகாத சேர்க்கையால் வழி தவறி;
         காதலெனும் கானல்நீரில் தவறிவிழ,
ஒருதலைக் காமம் கொண்டு ‘என்னவளே’
        என்றவனை ‘புண்ணாக்கி’ னாள்.

இன்று…..

தம்பட்டை அடித்து, உற்றோர் கதற,
        பெற்ற உயிர்  துடித்துடிக்க,
நேசமென்னும் கோறபசிக்கு உயிர்நீத்து;
        பாடையில் ஏறினாயே நட்பே!
செமஸ்டர் முடிவதற்குள் நீயே
                                -சருகாகினாய்.

உனைப்பெற உன்தாய் பெற்ற வலியை
      எண்ணாமல் தூக்குமேடை ஏறியது
                                               -சரியா?
நீக்குடித்த உமது அன்னையின் குருதியை

    நினைக்காது காதலித்தது சரியா?…

எழுதியவர் ம. தினேஷ் , இரண்டாம் ஆண்டு Automobile Engineering மாணவர்