சாதிக்க பிறந்தவனடா நீ – கவிதை

 

Image result for success photos

 

வெற்று வேடிக்கை இல்லை வாழ்க்கை
ஊற்று போல் தினம் தினம் பிரச்சினைகள் எழலாம்
நேற்று போல இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
உன் விருப்பம் போல் நடக்காமல் போகலாம்
சூழ்நிலைகள் சூழ்ச்சியில் நீ வீழாதே
காலத்தின் கட்டுக்குள் துவண்டு விடாதே
தவறி விழுந்தால் மறு நொடி
நிமிர்ந்து எழு
வாழ்வெனும் வள்ளல் வாய்ப்புகளை வழங்கும்
அதை பயன்படுத்தி வெற்றி கொள் எங்கும்
இலவச இணைப்புகள் நன்றாய் பயன்படுவதில்லை
கஷ்டமில்லா வாழ்வும்  சரித்திரம் உருவாக்குவதில்லை
உனக்குள் இருக்கும் உணர்வை மதி
உன் மதியால் விதியை மிதி
கஷ்டங்களே சகாப்தங்களை உருவாக்கும்
துவண்டு விடாதே என் உடன்பிறப்பே
முன்னே செல்
வாழ்வை வெல்

எழுதியவர் : அருண் பாலாஜி , முதலாம் ஆண்டு ECE மாணவர்