புதிய தொடக்கம்

புத்தாண்டு…இது ஒரு புதிய ஆண்டு
புதுமை பொங்க வரும் தமிழ் புத்தாண்டு
வேற்றுமைகள் எல்லாம் களைய
ஒற்றுமை உள்ளங்களில் அமைய
பூ பூக்கின்ற வேளையில்
நாட்டை வளப்படுத்துவோம்
காய் கனியாதல் போலே
வாழ்வில் கசந்தது யாவும் இனிக்கும்
சித்திரை முதல் பங்குனி வரை
பன்னிரு திங்கள் உண்டு
படைத்தவன் பகுத்துண்டு வாழ படைத்தான்
இருப்பதை இயலாதோர்க்கு ஈக
வாழ்த்துவார் உன்னை முழு மனதாக
ஆக, புதிய தொடக்கம்
நன்றே அமையட்டும்
வாழ்வு மலரட்டும் !

 

எழுதியவர் : அருண் பாலாஜி , முதலாம் ஆண்டு ECE மாணவர்