விவசாயிகளின் கண்ணீரை சிறிது சிதற விடுகிறேன்

 

Image result for farmer indian drought

 

ஆதரவு கேட்டோம் நாங்கள்;

ஆதாயம் எதிர்பார்க்கிறீர்கள் நீங்கள்.

ஊக்கம் கேட்கிறோம் நாங்கள்;

ஊதியம் எதிர்பார்க்கிறீர்கள் நீங்கள்.

உரம் கேட்கிறோம் நாங்கள்;

உயிரைக் கேட்கிறீர்கள் நீங்கள்.

தண்ணீர் கேட்கிறோம் நாங்கள்;

பதிலுக்குக் கண்ணீர் கேட்கிறீர்கள் நீங்கள்.

உழுவ நிலமிருந்தும் உழுவநிலைக் கேட்கிறோம்;

வறண்டு விட்டது கண்கள்;

இருண்டு விட்டது பார்வை;

இழந்து கொண்டு இருக்கிறோம் வாழ்வை.

விவசாயத்திற்கு கொடுக்க வேண்டும் சலுகை;

கவனிக்காவிட்டால் நாடென்கும் பசி அழுகை.

ஏர்க்கலப்பைகள் இப்பொழுதுமுண்டு ஏராளம்;

இதைக்கண்டு கொள்ளவில்லை நமது பாராளம்;

பசித்தவிப்பு நீங்கும் வரை எதிலும் கிடையாது தாராளம்.

படித்துவிட்டோம் பட்டமும் பெற்றுவிட்டோம்;

ஆனால் பசியென்பது ஒன்று உண்டு;

என்பதை மட்டும் ஏன் மறந்துவிட்டோம்.

விவசாயம் நாட்டின் முதுகெலும்பு

விவசாயிகளுக்கும் மாணவனே நீ முன்னின்று உதவு.

 எழுதியவர் : நீலமேகம், நான்காம் ஆண்டு ECE மாணவன்