இயலாமை – கவிதை

 

 

கைகளோ ‘கொடு’ என்கின்றன…

என்ன செய்வது… உள்ளம் மட்டுமே உலகளவு!

உள்ளம் உள்ளவன் உலகில் உறைவது எவ்வாறோ?

பணமிருந்தும் மனமில்லாமல் தன் சிந்தையை

மண்ணில் புதைத்து மானுடருள் வெறும் மண்டைஓடுகளாய் அலையும் இழிபிறப்போ இது??

பணம் படைத்தவனோ பகட்டை மட்டுமே எண்ணுகிறான்…

மனமிருப்பவனோ சக மானுடரை எண்ணுகிறான்…

இரண்டிலும் பாதி என்பவன் நிலையோ

இயலாமை என்னும் இன்மை…

காலம் கரைந்தோடினாலும் காசு தரும் மாயைக் கண்களை மட்டுமா மறைக்கிறது??

 

Image result for charity among rich

மனித மாண்புகளை மண்ணோடல்லவா புதைக்கிறது…

இறைவா ஈகை உள்ளத்தைப் படைத்துவிட்டாய்…

இயலாமையையும் உடன் இருத்திவிட்டாயே..!!

பணம் படைத்துவிட்டால் இவர்களும் பகட்டைப் பழகிவிடுவார் என்று பயந்துவிட்டாயோ??

செல்வத்தின் ஒலியைக் கேட்டுச் சிலரின் செவிகள் செத்துவிட்டன-உணவில்லாமல் இங்கே தினமும் செத்து மடிவோரின்

அலறலைக் கேட்க.. பணத்தின் மணம் நுகர்ந்த பலருக்கோ…அவர்கள் பிணங்களின் நாற்றம் துர்நாற்றமே…

இறுதியில் எல்லோரும் உரைப்பதே…

பணமிருக்கும் இடத்தில் மனமிருப்பதில்லை!!மனமிருக்கும் இடத்தில் பணமிருப்பதில்லை!!

இரண்டும் படைத்திருந்தோர் எல்லாம் எங்கோ மறைந்துவிட்டார்…

இயலாமையால் இறந்து கொண்டிருப்போர் மட்டுமே இங்கு…

 எழுதியவர் : K. விக்னேஷ், இரண்டாம் ஆண்டு CT மாணவன்