பந்தய வாழ்க்கை – கவிதை

ஓடுகிறோம் ஓடுகிறோம்
செக்கு மாடுகளாய் , வண்டியின் சக்கரங்களாய்.
ஓடுகிறோம் ஓடுகிறோம்
வெற்றுச்சுவற்றில் கடிகாரமாய்.
ஓடுகிறோம் ஓடுகிறோம்
வாழ்க்கைப் பந்தயத்தில் குதிரைகளாய்.
எதற்கெனத் தெரியாமல் ஓடுகிறோம்.
ஏனென்று கேட்காமல் ஓடுகிறோம்.
யாருக்காக என்பதைப் புரிந்துகொள்ளாமல் ஓடுகிறோம்.
கதிரவனைச் சற்றும் கோல்கள் போல் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
ஓட்டமே வாழ்க்கை என்றாகிவிட்டது.
இந்த மிகப்பெரிய பந்தயத்தில்
பண மேடை ஏறிப் பாய்ப்போட்டுப் படுத்தவர்களும் உண்டு.
இரத்த வெள்ளத்தில் நீந்திச் சென்று முடிவுக்கோட்டை விரல் நுனியில் தொட்டவர்களும் உண்டு.

எழுதியவர்:  பவித்ரா , முதலாம் ஆண்டு  Instrumentation மாணவி