இந்தியா புனிதமடைய ஓர் சிறு ஆலோசனை

 முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழின் பேராற்றலைப் பற்றி நாம் அறிவோம். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு தமிழகத்தைப் புரட்டிப் போட்ட “டக்கரு டக்கரு” பாடல். அதைப் போல் இல்லாவிட்டாலும், இப்போது “சுழலி” என்ற பாடலை எழுதிய விவேக் அவர்களின் வரிகளையும் சந்தோஷ் நாராயணனனின் இசையும் கொண்ட “சதையை மீறி” என்ற பாடல் ஓர் புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

 “காலம் நியாயக் கூண்டிலே

நம்மைத் தள்ளும் விதிப்படி

இவர்கள் கையைத் தட்டினால்

அதுவே அதுவே சவுக்கடி”

என்று துவங்கும் இப்பாடல் திருநங்கைகளின் வேதனை வாழ்வை எடுத்துக் காட்டுகிறது.

மாபெரும் சுதந்திரப் போரட்டம் ஒன்று மேற்கொண்டு இன்று வறுமையைத் துரத்திக் கொண்டிருக்கும் இந்தியா, நாளை அனைவரும் மகிழ்ந்து வாழும் ஓர் சொர்க்க பூமியாய் மாற இருக்கிறது. அப்போது இவர்கள் ஒதுக்கப்பட்டவர்களாய் போய் விடக்கூடாது அல்லவா?

Image result for sadhayai meeri

ஒருவர் பிறந்த உடன் அவர் திருநங்கையா இல்லையா என்பதை அறிய முடியாது. ஓர் குறிப்பிட்ட வயதை எட்டிய பின்னரே இதைக் கண்டறிய முடியும். இது நம் கையில் இல்லை. இது நம் விருப்பமும் இல்லை. அப்படிப் பட்ட ஒருவரை சமுதாயத்திற்கு பயந்து வீட்டை விட்டு விரட்டுவது நியாயம் தானா?

  நாம் தொடர் வண்டியில் பயணிக்கும் வேளையில் இவர்கள் வருகின்ற போது தூங்குவதைப் போல் நடிக்கிறோம், அவர்களை வார்த்தைகளைக் கொண்டு இகழ்கிறோம். அவர்கள் இந்நிலைக்குத் தள்ளி விட்டதே நாம் அல்லவா? இது எவருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். அப்போது அவர் செய்வதறியாது தத்தளிக்கும் நிலையை யோசித்துப் பாருங்கள். நம் தம்பிக்கோ தங்கைக்கோ இப்படி நிகழ்ந்தால் நாம் எவ்வாறு நடந்து கொள்வோம்? இக்கேள்விகளுக்கு பதிலளிக்கத் துவங்கினாலே நாம் சிறிது சிறிதாய் இதற்கு தீர்வு காணத் துவங்கி விடுவோம்.

சாந்தி போல் மீண்டும் ஒருவர் நம் நாட்டில் துன்பப் படக் கூடாது அல்லவா?

பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே மணிக் கணக்கில் எளிதாய் பேசிவிட்டு மறைந்து விட வேண்டாம் என்ற எண்ணத்தால் இதற்கு தீர்வு ஒன்று கூற கடமைப் ப்டிருக்கிறேன்.

1.நம்முள் எத்தனைப் பேரின் கல்லூரிகளில் திரு நங்கைகள் படிக்கின்றனர். அவர்கள் படித்து முன்வனேறுவதற்கு வசதிகள் இருந்தும் அவர்கள் பயன் படுத்திக்கொள்வதில்லை அல்லது அவர்களை நாம் விடுவதில்லை.

“கற்றோர்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”

கல்வி பெற்றாலே அவர்களின் நிலை உயரும்.

2.நமக்கு தெரிந்தவர்கள் சுய தொழில் செய்பவராக இருந்தால் அவர்களிடம் திருநங்கைகளை பணியில் சேர்க்கச் சொல்லலாம்.

3.அவர்கள் சுய தொழில் ஆரம்பித்தால்? அவர்கள் விதியை அவர்களே முடிவு செய்வார்கள். இது சாத்தியமாக்க அவர்களுக்குக் கல்வியும் பணமும் கிடைக்க நாம் உதவி செய்வோம்.

முடிந்த வரை அனைவரையும் இது அடைய வழி செய்வோம்.

 எழுதியவர் : கு கிஷோர், முதலாம் ஆண்டு ECE மாணவன்