சகோதரன் – கவிதை

தங்கை என்று அழைக்க சொந்தம் வந்ததே இன்று
கண்ணீரைத் துடைக்க கைகள் வந்ததே இன்று
ஒன்றாய் பல கதைகள் பேசி மகழ்ந்தோம் இன்று
என் ஏக்கங்களைப் போக்கும் வரமாய் வந்தாய் இன்று
என் வினாக்களுக்கு விடையென கிடைத்தாய் இன்று
உன் பாசத்தை பரிசாக அளித்தாய் இன்று
சிறு ஆசை ஒன்று மனதில் தோன்றியதே இன்று
உன்னோடு இறுதிவரை வரவேண்டும் என்று.

எழுதியவர் : K. பவித்ரா, முதலாம் ஆண்டு Instrumentation மாணவி