தந்தைகளுக்கு சமர்ப்பணம் – கவிதை

 

Related image

 

மகளின் விருப்பத்தை உடனேயும்

மகனின் விருப்பத்தை அவ்வப்போதும்

மனைவியின் விருப்பத்தை சிறிது சிறிதாகவும்

தன் உழைப்பின் ஊதியத்தில் அனைத்தையும் நிறைவேற்றி

தன் உழைப்பின் களைப்பை வெளிக்காட்டாமலும்

மகளின் திருமணக் கடனையும்

மகனின் படிப்புக் கடனையும்

அடைக்க நீ பட்ட துயரம் சிறிதல்ல

வேண்டுமென்பதை கேட்டதும் வாங்கிக்கொடுக்க

நீ துடிக்கும் துடிப்பு கடலை விடப்பெரிது

இன்றும் தன் குடும்பத்துக்காக

உழைக்க சளைக்காமல் நீ – தந்தையாக !!!

 

எழுதியவர்: உதயராஜ், Automobile Engineering ஆசிரியர்