மறுவார்த்தை பேசாதே – பாடல் விமர்சனம்

மறு வார்த்தை பேசாதே

மடி மீது நீ தூங்கிடு

        மனதின் ஏக்கங்களை வெளிப்படுத்த பல கலைகள் உள்ளன.பாடல் இயற்றுதல்,இசை,மற்றும் நடனம் அதன் மூலமாக நமது எண்ண ஒட்டங்களை வெளிப்படுத்துகிறோம்.இந்த மூன்றன் கலவை தான் திரைப்பட பாடல்கள்.நம் சிந்தனைகளை அப்படியே தெளிவாய் திரையில் பல பாடல்கள் பிரதிபலிக்கின்றன.

   கவுதம் மேனனின் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் “மறு வார்தை பேசாதே” என்னும் பாடல்.குழலின் இனிமையுடன் பாடல் தொடங்குகிறது.

           மறு வார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு

    கண்களுக்கு இமை போல் காவலிருப்பேன் என்னும் வரியை உணரும் போது சொற்களையும் உணர்வுகளையும் உவமையையும் தாமரை அவர்கள் சரியாக கையாண்டிருக்கிறார் என தோன்றுகிறது.மனம் வரிகளுடன் ஒன்றி விடுகிறது.

       மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாள் இல்லையே

பிரிந்தாலும் என் அன்பு
ஒரு போதும் பொய் இல்லையே

     உண்மை காதலின் உணர்வை முதல் இரு அடிகள் உணர்த்துகின்றன.தூய்மையான அன்பின் திறனை பின் இரு வரிகள் காட்டுகின்றன.பாடலை கேட்க கேட்க வரிகளை கண்கள் நோக்க நோக்க நேரம் நகர்வதே தெரிவதில்லை.

         நாம் இருவரின் உரையாடல்களை மனப்பாடமாய் நான் அறிவேன்.மென்மையான உன் மேனியை மயில் தோகை போல் விரல்கள் வருடும்.

          மறு வார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல் நான் காக்க
கனவாய் நீ மாறிடு

பாடல் முழுவதும் காதல்,காதல்,காதல்…..!!!

விமர்சித்தவர் : அருண் பாலாஜி, முதலாம் ஆண்டு ECE மாணவர்