பிச்சை வாழ்வேற்று இங்கே பிழைத்துக் கொண்டிருக்கும்
பெருங்குடிகளின் வாழ்வும் மலர வேண்டும் எனும்
இச்சை இல்லாமல் இவர்களின் எச்சிலுக்கு இரையாகிக் கொண்டிருக்கும் ஈனப்பிறவிகளைக் கொண்ட நாடே….
கைகளை ஏந்தியது இவர்கள் குற்றமா??இல்லை…இவ்வாழ்விற்குக் காரணமாகிய கயவர்களின் குற்றமா??
“ஏழைகள் இல்லா இந்தியா!!”என்று மேடைகள் பல
ஏறி ஏறிக் கூவிக் கொண்டிருப்போர் இவர்கள் வாழ்வில் விளக்கேற்ற என்னதான் செய்தாரோ விளங்கவில்லை..
கண்களின் முன் கைகளை ஏந்தி நிற்கும் இந்தக் கடவுள்களைக் காணும்பொழுது,
பணம் படைத்த பலரோ இவர்களைப் பாவிகள் என்றெண்ணுவதும்
மனம் படைத்த சிலரோ மனமுடைந்து மறைந்தோடி ஒழிவதுமே
இன்று மாளாத உண்மையாகிவிட்டது..
ஏங்கித் தவிக்கும் இவர்களைச் சற்றே எட்டிப்பார்க்கையில்,என்னுள் ஓர் எண்ணம்….
சொத்து சுகங்களில்லா இவர்களிடம்,
“நாங்கள் இந்நாட்டின் சொந்தங்கள்தான் ” என்று சொல்லிக்கொள்ள சொற்ப ஆவணங்களாவது இருக்குமா?
வாய்மையை இங்கே வதைத்துக் கொண்டிருக்கும் வலையை உங்களை அகற்றச் சொல்லவில்லை..
அருகிலாவது சென்று உங்கள் அறியாமையை விலக்கிக் கொள்ளுங்களேன்….
எழுதியவர் : க. விக்னேஷ் , இரண்டாம் ஆண்டு CT மாணவர்