மரணத்தின் மேடை – கவிதை

 

Image result for farmers sad

 

எஜமானின் மனங்குளிர,
காலை பனித்துளியை உரிஞ்சி,
தளதளவென, வரும் எஜமானுக்குக் காட்சி கொடுக்கும்.
மாலை, சக்தியிழந்து, வாடி
எஜமான் கண்ணீரைப் பார்க்க
மனமில்லாமல் தலை சாய்கிறது,
வறுமையின் பிடியில் சிந்துகிறான் கண்ணீரை,
அந்தக் கண்ணீரிலாவது பயிரைக்
காப்பாற்றலாம் என்று, கண்ணீரும் வற்றி ஏறுகிறான்
மரணத்தின் மேடையில்…

 

எழுதியவர் : செ.பிரேம்  குமார், முதலாம் ஆண்டு Automobile Engineering மாணவர்