மெரினா கண்ட வீரம் – கவிதை

 

 

வீரமே வீண்போனதே
கனவுகள் கண்ணீரானதே
உரிமையின் விலாசத்தை
தேடியலைந்தே நாட்கள் ஓடியதே
காற்றும் கதறி அழுததே
கடலலையிலும் வியர்வை வாடையே
பனியும் எங்கள் நிலைகண்டு
பஞ்சாய் மேனி இளைத்ததே
மன்னனைக் கண்டும் பணியாத கூட்டம்
இன்று ஒற்றுமையிழந்து தவிக்கிறதே
வாசம் மாறாத பூக்களெல்லாம்
திசை மாறி மண்ணைப் பிரிகின்றதே
ஓடித் திரிந்த முரட்டுக் கால்கள்
ஓரிடத்தில் முடக்கப்பட்டபோதும்
நாளுக் கால்களின் வருங்காலம் எண்ணி
துன்பத்தையும் தூக்கி எறிந்தோமே
கண்ணீர் துளிகள் முட்டி மோதும் போது
குருதி அனலில் வீரம் மெருகேறிப்போகும்
அடக்க வந்த கைகள் கூட
அனைத்து எங்கள் உயிரைக் காக்கும்.

கவிதையை எழுதியவர் : கே. பவித்ரா , முதலாம் ஆண்டு E and I மாணவி.