பெண்ணே உனக்கு – கவிதை

                          

 

மகளாகப் பிறந்தாய் குடும்பத்தின்

குலதெய்வமாய்

தங்கையாகப் பிறந்தாய் சகோதரனுக்குப்

பொறுத்துக்கொண்டாய்

அக்காவாகப் பிறந்தாய் உடன்பிறந்தோருக்கு

விட்டுக்கொடுத்தாய்

தோழியாகப் பிறந்தாய் தோழனுக்கு

துணைநின்றாய்  

காதலியாகப் பிறந்தாய் காதலனுக்கு

எல்லாமுமாய்

மனைவியாகப் பிறந்தாய் கணவனுக்கு

மற்றொருதாயாய்

தாயகப் பிறந்தாய் குழந்தைப்பேறில்

மறுபிறப்பாய்

எத்தனை பிறப்பு ஒரேபிறவியில்

பெண்ணே உனக்கு…

 

கவிதையை தொகுத்து வழங்கியவர் : கார்த்திக், இரண்டாம் ஆண்டு Automobile Engineering

மாணவர்