உன் விழி – கவிதை

உன் விழி  இரண்டும் கவிதை கூறின,
செவிக்கு அப்பாற்பட்ட காதலின் ஓசையில்…
என் இதயத்துடிப்பு எல்லை மீறியது,
இமைகள் இரண்டும் செயலிழந்து போனது,
விழித்திரை… அதனில் உன் உருவம்,
என் மனத்திரையில் ஓர் உயிரோவியம்…
உன்னிருவிழியின் கரு விழிகளின் காட்சி,
எனக்கு நினைவு கூர்ந்தது
என் தாய் கருவறையின் காரிருள் காட்சி…
என் உயிர் தேடிய இன்னுயிர் நீ…
என் உடல் உள்ளவரை உயிரணு நீ…
உலகத்தின் சுழற்சி அதனை ஒரு நொடியில்
என் உள்ளத்தில் உணர்த்தியது!!!
உன் விழி…….

கவிஞர் – சிவாநந்தன் சுந்தரம், இரண்டாம் ஆண்டு ECE மாணவர்