பொன்னியின் செல்வன் – நூல் விமர்சனம்

      பொன்னியின் செல்வன் என்பது இராசராச சோழனைக் குறிக்கும்.இந்த மாமன்னனின் காலத்தில் தான் சோழர்  குலம் பெரும் புகழ் பெற்றது.கடற்படையின் முக்கியத்துவத்தை உணர்நது அவன் அதை பலப்படுத்தினான்.கடல் கடந்து சென்று வென்றான் கட்டிடக்கலையில் மணியாய் விளங்கும்,பிரம்மாண்டத்தின் வடிவாய் நிலை பெற்றிருக்கும் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டினான்.

     சரி,இப்போது நாவலுக்கு வருவோம்.  இந்நூல்⁠⁠⁠⁠ கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டது. இக்கதை அம்மன்னனின் இளமைப் பருவத்தில் நிகழ்ந்தது.ஐந்து பாகங்களை உடையது.முதன் முதலில் 1950 இல் கல்கி வார இதழில் வெளியானது.ஓவியங்களை மணியம்.செல்வன் என்பவர் தீட்டினார்.நதியும் ஓட்டமும் போலே கல்கியின் எழுத்தும் மணியம் செல்வனின் ஓவியங்களும் சேர்ந்தே அமைந்தது தனிச்சிறப்பு.

         கதையில் ஏராளமான பாத்திரங்கள்.நாயகன் வந்தியத்தேவன் என்னும் வல்லத்து இளவரசன்.அவன் ஆடி பதினெட்டாம் பெருக்கன்று வீர நாராயண ஏரியின் பக்கமாய் போகிறான்.இப்பயணத்தில்பய தான் கதை தொடங்குகிறது.வல்லத்து இளவரசன் இளவரசர் ஆதித்த கரிகாலரிடம் இருந்து அவர் தங்கையான குந்தவை நாச்சியாருக்கு ஓலை கொண்டு செல்கிறான்.அதில் அவன்  கண்டுகொள்ளும் அரசாங்க இரகசியங்களால் பல பகைவர்களை சம்பாதிக்கிறான் இளைய பிராட்டி குந்தவை நாச்சியார் மீது காதல் கொள்கிறான்.பொன்னியின் செல்வனான அருள் மொழி தேவரின் உயிர் நண்பனாகிறான்.இடையில் வீரபாண்டியனின் ஆபத்துதவிகள் என்னும் கூட்டத்தினர் சோழ நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி இழந்த நாட்டை  பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு முயல்கின்றனர்.இதை நம் கதாநாயகன் எப்படி முறியடிக்கிறான் என்பதை படித்தே பாருங்கள்.

         வானத்தில் உள்ள விண்மீன்கள் அனைத்தையும் ஒருவன் எண்ண முடியுமா ??? ஆனால் முயற்சி செய்வது தவறில்லை அல்லவா?? அதனால் தான் நான் முயன்றிருக்கிறேன்.இந்த ஒப்பற்ற நாவலை பற்றி தங்களிடம் சொல்ல.படிக்க படிக்க கதையோடு மொத்தமாய் ஒன்றி போய் விடுகிறது மனம்.ஒவ்வொரு பக்கத்திலும் சுவாரசியம்,பண்டையத் தமிழனின் சிறப்பு,சோழ குலத்தின் பெருமை,வீரத்தமிழரின் வரலாறு .

          ஆசிரியரின் திறத்தை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.இயற்கை காட்சிகளை அழகாக வர்ணிக்கிறார்.

 

 

        கூகுள் விளையாட்டு சந்தையில் செயலியாக இந்நூல் உள்ளது. படித்து பாருங்கள்,பூரித்து போவீர்கள்.

விமர்சித்தவர் : அருண் பாலாஜி , முதலாம் ஆண்டு ECE மாணவர் .