வா மழையே – கவிதை


மண்வாசம் மனம் ஈர்க்க,
நேசம் உன்னை எதிர்பார்க்க,
குளிர்மையான காற்றடிக்க,
ஏமாற்றாமல் வருகை தர,
சிறுவர் எல்லாம் கூத்தாட,
குடைகளெல்லாம் தலை விரிய,
முதல் துளியே இன்பம்தர,
முழுதாய் நனைய நான் ஏங்க,
தாராளமாய் தண்ணீர் தர,
தரை எல்லாம் ஈரமாக,
உன்னை நம்பி விவசாயி இருக்க,
விவசாயியை நம்பி உலகம் இருக்க,
இன்று வந்ததோடு நில்லாமல்,
தினம்தோறும் வா மழையே.

எழுத்தாளர் தன்னை பற்றி எவ்விவரமும் போடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.