பிரிவின் வலி – மனஉறுதி – கவிதைகள்

பிரிவின் வலி

பிரிவென்பது காதலின்

சரிவல்ல மாறாக – அஃது

காதலை மென்மேலும்

உறுதி உணர்த்தும் – ஒரு

பணிவாகும் ! உதடுகளின்

அழகிய சிரிப்பு மகிச்சியை

மட்டும் உணர்த்து வதில்லை

பல சமயங்களில் உணர்ச்சிகளை

மறைக்கும் வலியும் சிரிப்பே !

 

மனஉறுதி

ஆயிரம் துன்பங்கள்

கண்டும் !

பன்முறை தோல்விகளை

உணர்ந்தும் !

அவதூறு சொற்கள் பல

கேட்டும் !

மனமோ நேசிக்கிறது

உன் மனஉறுதி,

கொண்ட அன்பை

அழகே !

 

கவிஞர் :  R. ராகுல் , முதலாம் ஆண்டு ECE மாணவன்