ஒரு காதல் கதை

அது மழைக்கால மாலை வேலை.  குளிர்ந்த காற்று இதமாக வீசி உடலை நடுங்கி கொண்டிருந்தது. அந்த நாளின் கல்லூரி வேலை முடிந்தாகி விட்டது. மாணவர்கள் அவரவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் நம் பாரம்பர்ய எம்.ஐ.டி சாலையை கடந்து கொண்டிருந்தார்கள். ஆண்  நண்பர்கள் சிலர்  பெண்களிடம் பேசிக்கொண்டிருந்தனர், எனக்கோ அத்தகைய வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என்று கூறிவிட முடியாது. என் தயக்கம் என்னை விட்டதில்லை. இதில் என்ன தயக்கம் வேண்டிருக்கிறது? என்று தோன்றும்.

 

கல்லூரி தொடங்கி சில மாதங்களே கடந்திருந்தது. எல்லாம் புது முகங்கள். இது மட்டும் தான் என் தயக்கத்திற்கு காரணம் என்பதல்ல,  எனக்கு பெண்களிடம் எப்படி பேசவேண்டும் என்றே  தெரியாது என்று தான் கூறவேண்டும்.  அதனால் நான் இதுவரை என் கண் முன்னாலே தோன்றும் பெண்ககளை கூட ஏறிட்டு பார்த்ததில்லை.

ஆனால் என்னையே தலை நிமிர்ந்து காண வைத்து அவள் சிரிப்பொலி.  நான்  நிமிர்ந்த அந்த நொடி என் கண்கள் வழியே சென்ற அவள் முகம் என் மூளையில் பிம்பமாய் பதிந்தது. நான் போகும் திசைக்கு எதிர் திசையில் அடிக்கும் அந்த புயல் யார்? அவள் பெயர் என்ன? என்று பல வினாக்கள் எழுந்த படி இருந்தது. அவள் யாராய் இருந்தால் என்ன? இந்த புவியில் பிறந்ததற்கு எந்த பயனாவது உண்டா …என சிந்தித்து கொண்டிருந்த எனக்கு கிடைத்த ஒரு  பயன் என்றே என்ன தோன்றியது.

எப்பொழுதும் என் கண்களை முத்தமிட்டுக்கொண்டு தன் காதலை வெளிப்படுத்தி கொண்டிருக்கும் என் இமைகள், என் காவிய தலைவியை காண உதவியது. அவளை கண்டுகொண்டே என் காலம் சென்றுவிட வேண்டும் என்று மனதினுள் தோன்றியது. ஆனால் அவளோ எனக்கு ஏற்பட்டு கொண்டிருக்கும் ரசாயன மாற்றத்தை சிறிதும் அறியாதவளாய், என்னை கடந்து செல்ல முயன்றாள். என் கால்களோ அவளை பின்தொடர்ந்து செல்ல தயாராய் இருந்தது, மனமும் அதற்கு துணை தான்.

71346

பின் என்ன , அவளை தொடர்ந்து  செல்ல தொடங்கினேன். இன்னும் எத்தனை காலம் இப்படி  பின்னாலயே சென்றுகொண்டிருப்பது என தெரியவில்லை. இப்படியெல்லாம் என் மனதின் ஒரு பக்கம் சொல்லிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கமோ என்னிடம் “அவளை பின்தொடர்வதால் உனக்கு ஒன்னும் கிடைத்து விடாது, இது தற்காலிகமாக ஏற்படும் ஒரு மயக்கம்” என்றெல்லாம் கூறி என்னை என் வழியை பார்த்து நடக்க உத்தரவிட்டது. அப்படியே ஒரு குழப்பத்தோடு அவள் அழகை ரசித்துக்கொண்டே பின்னல் சென்று கொண்டிருந்தேன்.

அவள் எனக்கு ஒரு தேவதை போல தோன்றினாள். இந்திரலோகத்தில் ரம்பை, ஊர்வசி என அழகிகள் இருப்பார்களே, ஒரு வேலை அவர்களில் ஒருவளோ இவள், இல்லை இல்லை இவள் அவர்களை விட பல மடங்கு அழகாக தென்பட்டாள். அந்த சில நிமிடங்களில் அவள் அழகை வர்ணிக்க எனக்குள் பல கவிகள் தோன்றினார்கள். பல  காதல் வசனங்கள் என் மூளையில் ஓடி கொண்டிருந்தது.

கல்லூரி வாசலும் நெருங்கி கொண்டிருக்கிறது,அவள் செல்வதற்குள் என்னை பார்க்கமாட்டாளா என பரிதவித்து கொண்டிருந்தேன். அவள் கடை கண் பார்வை கிட்டினாலும் நான் பிழைத்துக்கொள்வேன். திடிரென்று, காய்ந்த மலர்களாய் இருந்தும் வாசம் வீசிக்கொண்டிருந்த மல்லிகை பூவினை சூடியிருந்த அவள் தலை என் பக்கம் திரும்பியது. காரிருளை விலக்கிக்கொண்டு வெளிவரும் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிரினை  போல, அவள் கண்களில் இருந்து வெளிப்பட்ட அந்த மாய ஒளியானது, என் மார்பை பிளந்து இதயத்தை நொறுக்கியது. அடடா, அவள் பார்வை என் மீது பட்டுவிட்டதே, நான் என் பிறவி பலனை அடைந்துவிட்டேன் போலும்..என்றெல்லாம் என்ன தோன்றியது.

ஆனால் ஒரு இன்ப அதிர்ச்சி, அவள் என்னை நோக்கி விரைந்தாள். எனக்கோ இதயம் வேகமாய்  துடித்து கொண்டிருந்தது. அவள் என் அருகில் வந்தால், என்ன செய்வது..என்று  யோசித்து கொண்டிருந்த அந்த சமயம் அவள் என் முன் வந்து நின்றாள். எனக்கோ மயக்கம் வரும்படி ஆகிவிட்டது,,அவள் தன் செவ்வாயை திறந்து, என்னமோ கூற தொடங்கினாள் .”டேய் மச்சி.. எழுத்துரு டா.. நேரம் இப்போவே 8.00 ஆகுது டா..” என்ற வாக்கியம் தான் எனக்கு கேட்டது..”ச்சே கனவா…மச்சி பகல் கனவு பலிக்கும்ல டா..”என்று கூறியபடி படுக்கையை விட்டு எழுந்தேன்.

 

12356572-the-boy-has-a-dream-vector-illustration-stock-vector-sleeping-cartoon-boy

அன்று முதல் இன்று வரை, பகலில் கல்லூரியிலும், இரவில் கனவிலும் நான் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்..என் இதய திருடியை..

எழுதியவர் : எம் இன்பரசு, இரண்டாம் ஆண்டு ECE மாணவன்