வினாவா?விடையா?

20160207094309

 

என்றும் போல அன்றும் ஒரு சராசரி நாள்.பள்ளிக்குச் சென்று,

இடைவிடாத பாடங்களை படித்தும், கேட்டும், சோர்வடைந்து வீடு

திரும்பிக்கொண்டிருந்தேன்.அன்று மதியம் உணவு இடைவேளையில்

அடித்த அரட்டையை வீதியில் தொடர ஆரம்பித்தோம்.ஒருவரை ஒருவர்

தள்ளிக்கொண்டும்,மோதிக்கொண்டும், அந்த நெரிசலான கடைவீதியில்

சென்றுகொண்டிருந்தவர்களை யெல்லாம் இடையூறு செய்தோம்.

எப்போதாவது யாராவது திட்டுவது உண்டு. பெற்றோரும் ஆசிரியரும்

திட்டுவதயே இந்த காதில் வாங்கி அந்த காதில் விடும் எங்களை திரும்பிப்

பார்க்க வைப்பது அவ்வளவு எளிதல்ல என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
அவரை சற்றும் பொருட்படுத்தாது, மீண்டும் எங்கள் அரட்டையை

தொடர்ந்தோம்.அரசியல், விளையாட்டு, பொது அறிவு, குத்துச்சண்டை,

கணிணி, இணையதள சேஷ்டைகள் என எல்லா தலைப்பிலும் புகுந்து

உரையாடிக்கொண்டிருந்தோம்.

“படிப்ப தவிர வேற எல்லாத்தையும் பேசுவானுங்களே……இவனுங்க!…”

என்று என் மனம் எண்ணிக்கொண்டிருக்கும் போதே, என் நண்பன்

“ஏன்டா?, பிசிக்ஸ்ல இதுவரைக்கும் எத்தன லெசன் கவர் பன்னியிருக்க?”
என்று கேட்க,
நய்யாண்டி பிடித்த இன்னொருவன் “புக்க மட்டும் தான் ப்ரவுன்

ஷீட்டு போட்டு கவர் பண்ணியிருக்கேன்”, என்றான்.

அதுவரை எங்களுடன் அமைதியாய் வந்த உம்மனாமூஞ்சு, திடீரென,

“ஏன் டா, உங்களுக்கு கொஞ்சம் கூட கவலையோ,பொருப்போ

இல்லையா?, போர்ட் எக்ஸாம் வர இன்னும் நாலு மாசம் தான் இருக்கு,

இப்போவே படிச்சு வெச்சா தான் பின்னால ஈஸியா இருக்கும்” என

நானும் அதற்கு ஒப்புக்கொண்டு, “ஆமாம்டா, எப்படியாவது நல்ல

மார்க் எடுத்தா தான் நல்ல காலேஜ்ல சீட்டு கிடைக்கும்” என்றேன்.

இவ்வளவு நேரம் கூச்சலிட்ட நாங்கள் சற்றே அமைதியானோம்.

அப்போது தான் எங்களுக்கு கடைவீதியின் சத்தமே காதில்

விழுந்தது.எதிரில் ஒரு கடையின் விளம்பர பலகையில் இருந்த

“பொம்மீஸ் தேவயாணி” கூட பிசிக்ஸ் ஆசிரியராக மாறி “படி” என

சொல்வது போல் தெரிந்தது.

“இதுவரைக்கும் வீட்ல இருக்கறவங்களும், அக்கம்பக்கத்தினோரும்

சொல்லிக்கொண்டிருந்த தாரக மந்திரத்தை இப்போ இவனுங்களும்

சொல்ல ஆரம்பிச்சுடானுங்களே …… இனிமேல் சீரியஸா படிக்கனும்….” என

இரண்டு பேர் தாம்பரத்திலேயே ட்யூஷன் சென்றார்கள். அவர்கள்

விலக நாங்கள் இருவரும் பேருந்து நிலையம் நோக்கி நடந்தோம்.

நய்யாண்டி செய்த இவனும் புலம்ப ஆரம்பித்தான்,

“உங்க ட்யூஷன்ல எவ்வளோ டா முடிச்சுருக்காங்க?”

“90% முடிச்சுட்டாங்கடா” என்று சொல்லிக்கொண்டே, “ எவ்வளோ முடிச்சா

என்ன?, நாம என்ன புரிஞ்சா படிக்கிறோம்…” என்று எண்ணினேன்.

பேருந்து நின்றுகொண்டிருந்த எல்லோரையும் இடித்து தள்ளுவது

போல வேகமாக, மிக நெருக்கமாக, காது கிழியும் சத்தத்துடன்

திரும்பியது. பள்ளி முடிந்தவுடன் விளையாடியதால் சற்று

நேரமாகிவிட்டது. பேருந்தில் ஒரே நெரிசல்.

”ஒரே ஒரு ஸ்டாப்பிங் தானே, கூட்டமா இருக்கு, அடுத்த பஸ்ல போலாம்.

“(சற்றே இழுத்தவாறு) தம்பி….., மணி ஆறு ஆச்சு, ட்யூஷன் இல்லையா….

ஆம், நாங்களும் எங்கள் வீட்டின் அருகே ட்யூஷன்

சென்றுக்கொண்டிருந்தோம். பள்ளி தேர்விற்கு லீவ் போட்டு ட்யூஷன்

தேர்வை எழுதும் அளவிற்கு ட்யூஷ்ன் மோகம் எங்களிடம்.

வீட்டில் இருந்தால் படிக்க தோன்றவில்லை என்று சிலரும்,

அரையாண்டிற்கு முன்பாகவே பாடங்களை முடித்துவிடலாம் என்று

சிலரும் ட்யூஷன் சென்றார்கள். சிலர், ட்யூஷன் வரும் வேறு சிலரை

பார்ப்பதற்காகவே ட்யூஷன் சென்றனர்.ட்யூஷன் செல்லாத ஒருவரை

காண்பதென்பது அறிதினும் அறிது!

வீட்டிற்கு வந்து ஐந்து நிமிடங்களில் உடையை மாற்றி, காபி

குடித்துவிட்டு, ட்யூஷன் சென்றேன்.

ஒரே நேரத்தில், ஒரே இடத்தில், இரு நூறு பேரை வைத்து,

ஒலிபெருக்கியில் சொல்லித்தரும் ட்யூஷங்களுக்கு மத்தியில், எங்கள் ட்யூஷன்

ஐந்தே பேர் (ஆசிரியர் உற்பட), கூறை போட்ட மொட்டைமாடியில்

மூன்று மின்விளக்கும், இரண்டு மின்விசிறியும், நான்கு பெஞ்சுகளும்

கொண்டது. பாடம் கற்பிப்பவர் பொறியியல் முதுகலை பயிலும் ஒரு

அண்ணா. தினம் மூன்று மணி நேரம், முதல் ஒரு மணி நேரம்

வெட்டிப்பேச்சு, பின் ஒரு மணி நேரம் கணக்குகளை போட்டுவிட்டு, பின்

அடுத்த ஒரு மணி நேரமும் வெட்டிப்பேச்சு தான்!

பெற்றோரிடமும், தம்பிகளுடனும், தாத்தா பாட்டியோடும் பேசக்கூட

நேரமோ, தெம்போ இருக்காது. கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்த

வண்ணம், தட்டில் வைத்ததை உண்டு விட்டு, படிக்க சென்று விட்டேன்.

தினமும் “யூனிட் டெஸ்ட்” வைப்பதே சாலச் சிறந்தது என எல்லா

பள்ளிகளும் கருதும் போது எங்கல் பள்ளி மட்டும் விதிவிலக்கா, என்ன?

மிகவும் சிரமப்பட்டு, பல நாட்டுப் பாடத்திட்டங்களை ஆராய்ந்து,

படித்த உடனே தூக்கம் வருவது போல் வடிவமைத்தவர்களின் நோக்கம்

செவ்வனே நிறைவேறியது. புத்தகத்தை திறந்த உடனெ தூக்கம்,

படுக்கையில் படுத்தேன், வந்த தூக்கம் எங்கோ ஒடிவிட்டது போலும்!

அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

மணி 11.00, ஒரே அமைதி, வீட்டில் எல்லோரும் உறங்கி விட்டனர்.

வெளியே கீச் கீச் என இரவில் கேட்கும் சத்தம். ஜன்னல் வழியே

அசைந்தாடும் எதிர்வீட்டின் முருங்கைமரம் தென்பட்டது. சிறுவயதில், எந்த

கவலையும் இன்றி சுற்றித்திரிந்ததெல்லாம் நினைவிற்கு வந்தது.

“ச்சே, இப்பல்லாம் பள்ளிக்கு போய்ட்டு வரவே நேரம் சரியா இருக்கு”

திடீரென அன்று மாலை பேசிய விஷயம் நினைவிற்கு வந்தது.

“எப்படியாவது பிப்ரவரிக்குள்ள படிச்சிடனும்…” என நினைத்தேன்.

மனக்குரங்கு ஊஞ்சலாட ஆரம்பித்தது.

திடீரென “(சந்தேகத்துடன்) ஆமாம்……, படிச்சு என்ன ஆக போகுது?”

என எனக்குள்ளே ஒரு கேள்வி.

அதற்கு நானே பதில் அளிப்பது போல,

“படிச்சா நல்ல மார்க் வாங்கலாம்….

நல்ல காலேஜ்ல சேரலாம்…

நல்லா படிச்சு பட்டம் வாங்கலாம்…

நல்ல வேளைக்கு போய் சம்பாதிக்களாம்…

அப்பாவையும், அம்மாவையும், குடும்பத்தையும் பார்த்துக்களாம்…

அவ்வளவு தானா?…. நாமலே சம்பாதிச்சு, நம்ம நல்லா வாழவா

இவ்வளோ போராட்டம்?, அவ்வளோ தானா வாழ்க்கை?….”

அசைந்தாடிய முருங்கைமரத்தினால், மனக்குரங்கு கவனம் சிதறி

“(சந்தேகத்துடன்) ஆமாம் , நாம மட்டும் நல்லா இருந்தா போதுமா?…,

நம்ம நாடும் நல்லா இருக்க வேணாமா?…,

நம்ம நாடு மட்டும் நல்ல இருந்தா போதுமா?…,

உலகத்துல இருக்க எல்லா மக்களும் நல்லா இருக்க வேணாமா?…”

“ஆமாம், முதலில் வீட்டிற்கு செய்துவிட்டு, பின் நாட்டிற்காகவும் ஏதாவது

செய்ய வேண்டும்” என தீர்மானித்தேன்.

“அட, இந்த வாழ்க்கைனா என்ன?……., நாமும் வாழ்ந்து மத்தவங்களயும் வாழ வைக்கனும்

(வடிவேலு பானியில்) இத தான் இமயமலையில் சித்தர்கள் ஒக்காந்து

யோசிக்கராங்களோ?….நாங்களும் யோசிப்போமுல்ல…

அப்படி பார்த்தா…, மத்த உயிரினங்கள் எல்லாம் எதற்கு இருக்கு?…,

அது சரி, அதோட இடத்தையும் நாமளே ஆக்கிரமிப்பு செஞ்சு விரட்டி

விடுறோம், இதுல எங்க இருந்து வாழ வைக்கிறது…..

ஆனா, அதுங்களுக்கும் கடவுள் உலகத்து மேல சமவுரிமை தானே

நமக்கு எதுக்கு இதெல்லாம், பிரியாணி திண்ணோமா கைய

கழுவினோமானு இருப்போம், அதுங்கல பார்த்துக்க தான் அரசாங்கம் இருக்கே, விலங்குகள் இல்லனா ‘இயற்கை சுழற்சி’

பாதிக்கப்படும், அதனால் மனிதர்கள் வாழ்வு பாதிக்கபடும்ல, நம்ம தான் தண்ணீ இல்லா காட்ட கூட ப்லாட் போட்டு

காட்டேஜா மாத்திடுவோமே?!!!, அதுக்காக தானே நாம கடவுள் குடுத்த

ஆறாம் அறிவ படிச்சு எழாவது அறிவா மாத்துறோம்…”

“அப்போ வாழ்க்கைனா என்ன?, நாம எப்படி வந்தோம்?, பிக் பாங் தியரியும்
முழுசா சொல்லல…,யாருக்கும் வாழ்க்கயின் ஆதியோ அந்தமோ தெரியல.

அப்போ, நமக்கு மேல ஒன்னு இருக்கு….”

தூரத்தில் ஒரு நாயின் ஊலை…கீழே விழும்

முருங்கைப்பூக்கள்….காற்றின் மெல்லிய இசை…

“அப்போ நம்ம எதுக்காக பொறந்திருப்போம்?…………., மற்ற

மனிதர்களுடனும், உயிரனங்களுடனும் அன்பு பாராட்டி…, எழில்

கொஞ்சும் உலகினை காத்திட தானோ?….
சரி, தூக்கம் வருது……”

– உங்கள் இனிய நண்பன் மொக்க மோகன்.