வாசகமல்ல

Written by யோகேஷ் பிரபு.இரா

வாசகமல்ல…வாசலில்……

1

 

அன்று வானம் அழுதது ஆனந்தத்தால்

இன்று வானம் அழுவது ஆதங்கத்தால்

2

 

விளை நிலமெல்லாம்

விலை நிலமாய் வீணாய்ப் போவதேன் ……

3

 

விருந்தும் மருந்தும்

மூன்று நாள் தானா??

யார் சொன்னது ??

4

 

மூவாயிரம் ஆண்டுகளாய்

அமுதள்ளித் தரும்

மரம் எங்கே போவது??

 

உயிரைக் கூடத் தருவேன்

நிழலில் அமர்ந்து

எத்ததனை ஜோடிகள் சொல்லிருப்பர்கள் ??

5

 

உணவுக்காக தினம் உயிர் சாய்க்கும்

மரம் எங்கே போவது??

6

 

பூமியின் வரம்

பூப்பூக்கும் மரம்…..

7

 

படிக்காதவன் மரம் என்றால்

படித்தவன் பகுத்தறிவில்

பாதி மரத்தின் காகிதக் கிளைகள் ……

8

 

படிக்காத பாமரன் பத்து மரம் வளர்த்தல் தான்

படித்த பா மரன் பக்கங்களில் பத்துவரி புரட்டமுடியும்…..

 

யார் சொன்னது??

மரத்திற்கு ஓர் அறிவென்று ……

9

 

உடுக்க உடை

இருக்க இடம்

அறிவிற்கும்  அடிவயிற்றிற்கும்

புசிக்க உணவு ….என்று அன்னைபோல்

பார்த்துப் பார்த்து

நேர்த்தியாய்ச் செய்யும்

மரத்திற்கு ஓர் அறிவா??

10

 

மரத்தைப் பகுந்துபார்க்கவா

மனிதா உனக்குப் பகுத்தறிவு ??

11

 

மரத்தைத் தூணாக்கி மாளிகையில் நடுபவனுக்கு

தூண் என்று பெயர்…….

12

 

இந்தியாவின் தூண்களே

இனியேனும் ……

13

 

வாசகமாய் எழுதாமல்

வாசலுக்கு ஒரு மரம் வளர்ப்போம்……

14

 

Written by யோகேஷ் பிரபு.இரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *