தமிழர் கொண்டாட்டம்

    தைத்  திங்கள்  திருநாள்  தமிழர்  வாழ்வின் பெரு  விழாக்களுள்  மிகச்  சிறந்ததாகும். குடும்பங்களோடு கொண்டாடும் இந்த விழாவினை, கல்லூரி  உறவுகளோடு கொண்டாடுவது அனைவருக்கும் இன்பம் கொடுக்கும் தானே ! அதற்காக ,  நம் கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பில்      பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட  முடிவு செய்யப்பட்டது. அதற்காக நிறைய போட்டிகளும் கலை  நிகழ்ச்சிகளும்  நடத்த மன்றத்தினர் ,  ஏற்பாடுகளை  தொடங்கினர். ஜனவரி 9  அன்று  மதியம் இரண்டு மணி அளவில் ஹாங்கார்-1   முன்னிருக்கும்[…]