இதயத்தின் ஏக்கங்கள்

  இறைவனே!…இறைவனே!…   என் இருள் இதயமே   உன் இருவிழிகளின் இலக்கா!…   இருட்டினில் இலகிய என் இமைகளும்   ஒளியினால் ஓங்குமா?…   எங்கிலும் ஏகாந்தமே!…   இறுதியில் ஏமாற்றமே!…   ஏக்கங்கள் பல ஏந்தியே   எனது இதயமும் இயங்குது!…   ஏற்றங்களில் என்றாவது எனதுயிர் இசையுமா?…   கவிஞர்: பிரதாப், மூன்றாம் ஆண்டு, Aeronautical.