வாழ்க்கை என்னும் பயணம் – கவிதை

விரும்பியது எல்லாம் நடக்குமா விண்மீன் கையில் கிடைக்குமா வான்கடலில் விண்மீன் பிடிக்க விரும்பினேன் பிரயாணம் நடுவில் தயங்கினேன் – மிகவும் சினந்தேன்-கொஞ்சம் வியந்தேன்-நிறைய வெட்கி குனிந்தேன் -இப்படியும் சில வாழ்வானது ஒன்றே செயலாற்றுவது நன்றே பயணத்தின் தொடக்கம் இதுவே இன்னும் செல்வோம் தூரம் காற்றும் துணை வரும் என்று தொடர்ந்தேன் தேங்காய் நார்களின் கடுமை கண்டேன் தொடர்வண்டிகளின் தொடர்ச்சியாய் புதிய முகங்கள் கண்டேன் அவர்களிடம் உழைப்பை கண்டேன் மழைத் துளிகளின் ஈரம் கண்டேன் துரோகங்கள் கசந்ததை உணர்ந்தேன்[…]