ஆழியின் குரல்

  செந்நிற சூரியன் அக்னி கதிருடன் என்னுள் அஸ்தமனம் ஆக; விண்ணின் வெம்மையில் மிதந்த முகில்களைக் காரிருள் சூழ; உலர்ந்த மணலுடன் உறவாடி அலைகள் நுரை எழுப்ப; உவர்ப்பு காற்று வெப்பம்நீத்து குளிர் வீசும் அந்தியில் ; என்கரையோரம், இவற்றை பாராமல் கண்ணீர் சிந்தும் பெண்ணே! சோகத்தை கால்தடங்களிடம் கூறி எம்முடன் கொஞ்சி விளையாடிடு; துன்பத்தை சிப்பிக்குள் புதைத்து இயற்கையோடு காதலில் விழு! – ம.தினேஷ்.   கவிஞர் : ம.தினேஷ் ,மூன்றாம்  ஆண்டு Automobile .