ஓர் விவசாயின் குமுறல்

ஊருக்கே சோறுபோட்ட இனம் என்ற பெருமையை மட்டும் வைத்துக்கொண்டு உண்ணும் ஒருவேளை உணவுக்கும் வழி இழந்தோம்.நகரமயமாக்கலுக்காக காடுகளை அழித்தார்கள்.விவசாய நிலங்களை எல்லாம் வீட்டுமனைகளாக்கினார்கள்.ஆறுகளை எங்கே போவோம் நாங்கள்:       பல்லாயிரம் கனவுகளுடன்(சில ஆயிரம் கடனுடன்) சித்திரை முதல் நாள் ஏர் பூட்டி உழவோட்டி மழைக்காக மருகி காத்திருந்து ஆடி பட்டம் தேடி விதைத்து ஆவணியில் உரமூட்டி,அடிக்கடி களையெடுத்து நீருக்காக ஏங்கி நிற்கையில் கார்த்திகையில் மழையடிக்க கனமாய் இருந்த மனம் மண்வாசக்காற்றிலே லேசாக.பயிரை ஓர் அடி[…]