இந்தியாவும் விண்வெளி ஆராய்ச்சியும்

  விண்வெளி ஆராய்ச்சி குறித்து பொதுவாக எழுதுவதைக் காட்டிலும் நம் தேசத்தோடு பிறவற்றை ஒப்பிட்டுரைப்பதே தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்கும். இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் சமீப கால அசுர வளர்ச்சியை ஒற்றை வரியில் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், மட்டைப்பந்துக்கு இணையாக சிறந்து விளங்கும் துறை என்பதே பொருத்தமாகும். இந்தியா ஒன்றும் அமெரிக்கா, ரஷ்யா போன்று ஆரம்ப கால கட்டத்திலிருந்தே இவ்வகை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கவில்லை. அந்நாடுகளுக்குப் பிறகே நாம் அத்துறையில் கால்பதித்தோம். ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் அவர்களுக்கு இணையாக,[…]