பெற்றும் பெறாமல்

    ஆள் நடமாட்டம் இல்லாத மிகவும் சிறிய அக்கிராமத்து ஸ்டேஷனில் நான் பயணித்து வந்த ரயில் நின்றது. ரயில் வந்தபின் இருக்கும் பயணிகளின் ஓட்டமோ,தேநீர் விற்பவரின் இரைச்சலோ, போர்ட்டர்களின் ஆர்ப்பாட்டமோ இல்லை. ஒரே ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் மட்டும் கையில் சிவப்பு,பச்சை கொடியுடன் நின்று கொண்டிருந்தார்.   அங்கிருந்த அமைதி என் மனதில் இல்லை. பூகம்பமும் இடியும் மின்னலும் புயலும் ஒரு சேர என்னை ஒரு வழி ஆக்கிக் கொண்டிந்தன.அதே நேரத்தில் ஒரு பெண் சுமார்[…]