மாலை மர்மங்கள் – அத்தியாயம் 1

  அத்தியாயம் 1:  அது ஒரு அமைதியான இரவு.கடிகாரத்தின் முள் இரண்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.பால் நிலா அமுதினைப் பொழிந்துக் கொண்டிருந்தது.மேகங்கள் அழகு நிலவுக்குக் காவல் என்று சூழ்ந்திருந்தன. நாள்காட்டி காட்டிய தேதி 23 – 05 – 98 . அதை ஒரு கை மெதுவாகக் கிழித்தெறிந்தது. அவர் தான் நமது கதையின் நாயகன், துப்பறியும் அதிகாரி சதுர் நாத்.ஒரு சிறிய வீடு தான் அவருடையது. அலமாரி முழுக்கக் காகிதங்கள், வெட்டிய நாளிதழ்த் துண்டுகள் ,கிழிந்த[…]