தனிமையும் நானும் – கவிதை

    பெற்றோருக்கு ஒரே மகள் என்பதில் தனிந்தேன்…. இளம் வயதில் தனியறை புகத் தனிந்தேன்…. கல்வியில் உயர்ந்தவள் என்பதில் தனிந்தேன்…. கலையில் சிறந்தவள் என்பதில் தனிந்தேன்… உறவின் ஏமாற்றத்தால் தனிந்தேன்… நட்பின் பிரிவால் தனிந்தேன்… நாணத்தால் பெண்ணென தனிந்தேன்… ‘இவற்றால் எனக்குள் ஒரு கேள்வி’ தனிமையின் மேல் கொண்ட நாட்டத்தால் தனிந்தேனோ ? இல்லை தனித்து வாழவே பிறந்தேனோ? கவிஞர் :  எஸ். ரேணுகா , இரண்டாம் ஆண்டு  Instrumentation மாணவி