தளபதி – திரைப்பட விமர்சனம்

“தளபதி” – இந்த சொல்லை பார்த்தவுடன் தங்கள் மனதுக்குள் பல எண்ணங்கள் எழலாம்.ஆனால் எனக்கோ, மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி ஆகியோர் நடித்த மாபெரும் வெற்றிப்படம் தான் மனதில் நிலை பெறுகிறது. இந்த திரைக்காவியம் மகாபாரத பின்னணியில் நகர்கிறது.இன்றளவும் மகாபாரத கதையில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் எது என்று கேட்டால்,நம்மில் பலர் கர்ணன் என்போம்.அர்ச்சுனனுக்கு இணையான மாவீரன்,கடையெழு வள்ளல்கள் யாவரும் சேர்த்து வைத்தாற் போன்ற கொடை வள்ளல்,சூரியபுத்திரன் கர்ணன்.அத்தகைய வீரனின் பாத்திரத்தை ரஜினிகாந்த் ஏற்று நடித்திருப்பார்.அவரின்[…]