பொன்னியின் செல்வன் – நூல் விமர்சனம்

      பொன்னியின் செல்வன் என்பது இராசராச சோழனைக் குறிக்கும்.இந்த மாமன்னனின் காலத்தில் தான் சோழர்  குலம் பெரும் புகழ் பெற்றது.கடற்படையின் முக்கியத்துவத்தை உணர்நது அவன் அதை பலப்படுத்தினான்.கடல் கடந்து சென்று வென்றான் கட்டிடக்கலையில் மணியாய் விளங்கும்,பிரம்மாண்டத்தின் வடிவாய் நிலை பெற்றிருக்கும் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டினான்.      சரி,இப்போது நாவலுக்கு வருவோம்.  இந்நூல்⁠⁠⁠⁠ கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டது. இக்கதை அம்மன்னனின் இளமைப் பருவத்தில் நிகழ்ந்தது.ஐந்து பாகங்களை உடையது.முதன் முதலில் 1950 இல் கல்கி வார[…]