ஒரு கிராமத்தானின் கதை

நட்சத்திரங்கள் இசை பாட, நிலவின் தாலாட்டில் உறங்கி, கதிரவனின் கைகளில் காலை எழுந்தவுடன், பசுமை கொஞ்சும் வயல்வெளியில் விளையாடி மகிழ்ந்து அரசு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சாதாரண விவசாயி மகன் நான். பள்ளிக்குச் செல்லும் வழியெல்லாம் அரட்டைகளும், சேட்டைகளும் எங்களின் புன்னகைக்கு காரணமாக இருந்தன. அந்தப் புன்னகை என்னவோ என்னிடம் நிலைக்கவில்லை. படிக்காத என் தாய் தந்தைக்கு என் படிப்பில் இருந்த அக்கறையால் “சிறந்த கல்விக்கூடம் என்ற சிறைக்கு” அனுப்பப்பட்டேன். காரணம், சமூகம் அதனை பெருமையாக எண்ணியது.[…]