வினாவா?விடையா?

  என்றும் போல அன்றும் ஒரு சராசரி நாள்.பள்ளிக்குச் சென்று, இடைவிடாத பாடங்களை படித்தும், கேட்டும், சோர்வடைந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.அன்று மதியம் உணவு இடைவேளையில் அடித்த அரட்டையை வீதியில் தொடர ஆரம்பித்தோம்.ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும்,மோதிக்கொண்டும், அந்த நெரிசலான கடைவீதியில் சென்றுகொண்டிருந்தவர்களை யெல்லாம் இடையூறு செய்தோம். எப்போதாவது யாராவது திட்டுவது உண்டு. பெற்றோரும் ஆசிரியரும் திட்டுவதயே இந்த காதில் வாங்கி அந்த காதில் விடும் எங்களை திரும்பிப் பார்க்க வைப்பது அவ்வளவு எளிதல்ல என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.[…]