கண்ணீரின் காரணம்

  ஓ வென்று நீ குரல் கொடுக்க, நின்ற இடத்தில் நான் நடுங்கி போனேன். உன் கவலையின் காரணம் அறிய ஓடி வந்து உன்னைப் பார்த்தேன். நீயோ தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாய்! உன் விம்மல்களின் பொருளறியாது நானோ குழம்பி நிற்க, நீயோ உன் கண்ணீரால் என்னை நித்தமும் நனைத்தாய். ஆனால் உன் கண்ணீர் கண்டு பூமி சிரிக்க அப்போது தான் புரிந்தது புவியின் புத்துணர்ச்சிக்காக உன் கண்ணீரைப் பூக்கச் செய்திருக்கிறாய் என… பிறர் துயர் களைய[…]

இ(ஈ)ப்பிறப்பு

  பிஞ்சுப் பருவத்திலே பிழையாக பிச்சை ஏந்தி நிற்பதையும், யான் கண்டேன்; மங்கைக்கு மலர் தூவாமல்,திருநங்கை தஞ்சம் தேடுவதையும், யான் கண்டேன்; இனிமையான இயற்கையை,இருளில் கண் இமைத்துக் காண்பவரையும்,யான் கண்டேன்; ஓர் உயிர்க்கான உடலை, ஊருக்கே அளித்தவளையும்,யான் கண்டேன்; இப்பிறப்பைக் கண்ட கணமே பிரம்மன் மீது நன்றி கொண்டேன்!   கவிஞர்: விஸ்வஜித் ஆகாஷ், நான்காம் ஆண்டு,Automobile Department.  

ஊழல்

    ஊனமுற்ற சமுதாயம் உழைப்பை மறந்து ஊழலை நம்பியது, சிறுதுளியும் சேர்ந்து பெருவெள்ளமாக பெருக்கெடுக்க நாடே நஞ்சாகியது, தரமில்லா தாவரங்கள் அரியாசனத்தில் அமர, வாசமான மலர்கள் கால்வாயில் கரைகிறது, சட்டத்தின் எதிரே கள்வனின் மொழியை அரசன் ஏற்க காசோலையே காற்றாகியது,     நெழிந்த நாட்டை உயரம் உயர்த்த நீயே உரமாகு என் தோழா!!!!   கவிஞர்: விஸ்வஜித்ஆகாஷ், நான்காம் ஆண்டு, Automobile Department.

வகுப்பறை – கவிதை

தூக்கம் தெளியாத கண்களுடன் துள்ளிக் குதித்த இதயங்கள்! லெக்ட்சர் இல்லை என்றவுடன் உற்சாகமாக ஊர்சுற்ற திட்டங்கள்! கண்ணில் ஆர்வத்துடன் கதையடிக்க – காத்திருக்கும் கவிதைப் பொழுதுகள்! பசி வந்து ஆட்கொண்ட வேளை மேஜைக்கடியே திறப்போம் திண்பண்டங்கள்… வகுப்பின் இறுதி மேஜையின் இம்சை முதல் மேஜையின் Entertainment ஆக சத்தமின்றி கனவில் சாதனை செய்யும் சிகரம் தொட பிறந்தோர் எழ! மூன்றே விநாடிகளில் முணுமுணுத்தப்படி காதைக் கடிக்கும் Comments! ஒலி எழும்பாத ஓசையில் குலுங்கி குலுங்கி சிந்தும் சிரிப்பு![…]

உனை பார்க்க ஏங்கிடும் அன்னையின் குறள்

  உணவிற்கு உறைவிடமே! உன்னத பசிபோக்கும் பார் எங்குமே! உழவனே ! நீ இல்லையெனில் நாடெங்கும் பதர்நிலமே! உனை அழித்து நீ உணவளித்தாய், உனை மறக்க சினம் தகர்த்தாய். உந்தன் தாயின் மனமோ உன் உழுநிலம், உந்தன் உயர்ந்த குணமோ பிறர் மனம் மறந்திடும். அன்று பிறர் வாழவோ நீ உயிர்கசிந்தாய், இன்று நீ வாழவே துயர்அடைந்தாய்! உழவனே!     பிறரின் சுயநல எண்ணத்தினால் மறைக்கப்பட்டது உன்உயிர் தியாகம். உனை நீங்கினால் அக்கணமே எம்முயிரும் நீங்கும்[…]

தாய்மொழி

  என் உயிரே! நீ என்னை தாய்க்கு இணையாக் கருத தேவையில்லை, என் மரபைப் பாடி பெருமிதம் கொள்ளத் தேவையில்லை, என் உரிமைக்காக உன் உயிரை உண்டுகொள்ள தேவையில்லை, உன்னால் வரும் தலைமுறைக்கு என்னை திறம்பட கற்பித்தாலே போதுமே! கவிஞர்: விஷ்வஜித் ஆகாஷ், இறுதி ஆண்டு, Automobile.

திசை மாறிய நோக்கம்

    நூறு நாட்கள் நடந்தவை எவையும்   நகக்கண் மதிப்பும் பெறாத போதே   தமக்கென தாமே உள்ளதை                                     உணர்ந்து   நரம்பும் சதையுமாய் மண்ணில் மாய்ந்தனர்     பச்சோந்திப் பறவைகளாய்                           […]

வாழ்க்கை என்னும் கடற்பயணம்

பயணத்தின் பக்கங்கள் கனவும் கைமீறி போனது -என் கடலும் உள்வாங்கிப் போனது கரைசேருமா என் கப்பலும் கைசேருமா என் நாட்களும் மழையடித்தும் கடும் புயலடித்தும் மனம்தளராமல் தள்ளாடுது என்தேகமும் மனதும் மன்றாடுது, மறம்கொண்டிட மாற்றம் மறைந்தாடுது, நான்சோர்ந்திட சோதனை அவை சாதனையாக்கிட சோகங்கள்பல தாண்டியே வெறியாடுது வெற்றுஇதயம் வெற்றியை வேட்டையாட! கவிஞர்: பிரதாப், இறுதி ஆண்டு, Aerospace Engineering.

நீ மறந்தாய்

  ஓ மானிடா! மனித இனமே மறைந்து போனது,நீ மறந்தாய்; மங்கையின் மானம் மழுங்கி போனது,நீ மறந்தாய்; மண்ணைக் காத்தவன் மண்ணுக்குள்ளே போனானே,நீ மறந்தாய்; மறைமுகமாக வந்து மரபையே அழித்தானே,நீ மறந்தாய்; நீ மறாவாமல் இருப்பது மறதி ஒன்றை மட்டுமே!   கவிஞர்: விஷ்வஜித் ஆகாஷ், இறுதி ஆண்டு, Automobile.

இதயத்தின் ஏக்கங்கள்

  இறைவனே!…இறைவனே!…   என் இருள் இதயமே   உன் இருவிழிகளின் இலக்கா!…   இருட்டினில் இலகிய என் இமைகளும்   ஒளியினால் ஓங்குமா?…   எங்கிலும் ஏகாந்தமே!…   இறுதியில் ஏமாற்றமே!…   ஏக்கங்கள் பல ஏந்தியே   எனது இதயமும் இயங்குது!…   ஏற்றங்களில் என்றாவது எனதுயிர் இசையுமா?…   கவிஞர்: பிரதாப், மூன்றாம் ஆண்டு, Aeronautical.