உனை பார்க்க ஏங்கிடும் அன்னையின் குறள்

  உணவிற்கு உறைவிடமே! உன்னத பசிபோக்கும் பார் எங்குமே! உழவனே ! நீ இல்லையெனில் நாடெங்கும் பதர்நிலமே! உனை அழித்து நீ உணவளித்தாய், உனை மறக்க சினம் தகர்த்தாய். உந்தன் தாயின் மனமோ உன் உழுநிலம், உந்தன் உயர்ந்த குணமோ பிறர் மனம் மறந்திடும். அன்று பிறர் வாழவோ நீ உயிர்கசிந்தாய், இன்று நீ வாழவே துயர்அடைந்தாய்! உழவனே!     பிறரின் சுயநல எண்ணத்தினால் மறைக்கப்பட்டது உன்உயிர் தியாகம். உனை நீங்கினால் அக்கணமே எம்முயிரும் நீங்கும்[…]

தாய்மொழி

  என் உயிரே! நீ என்னை தாய்க்கு இணையாக் கருத தேவையில்லை, என் மரபைப் பாடி பெருமிதம் கொள்ளத் தேவையில்லை, என் உரிமைக்காக உன் உயிரை உண்டுகொள்ள தேவையில்லை, உன்னால் வரும் தலைமுறைக்கு என்னை திறம்பட கற்பித்தாலே போதுமே! கவிஞர்: விஷ்வஜித் ஆகாஷ், இறுதி ஆண்டு, Automobile.

ஓட்டம்

ஏன் இத்தனை வேகம்? உலகம் அழியவா போகிறது? நில் கவனி செல் எல்லாம் ஒன்றாம் வகுப்புடன் போய்விட்டது ஆழ் மனநிலை சீற்றம் எரிமலையா ? அடைமழையா? ஏன் கண்களில் ஈரம்? விடையில்லா விடுகதையா? வேங்கையின் கால்கள் கொண்டு நிலங்கள் கடக்கிறாய் எங்கேயும் நில்லாமல் உலகை அளக்கிறாய் சிற்றின்பம் தேடி தேடல்கள் கோடி வட்டத்தில் சிக்காதே பிரமாண்ட பிரபஞ்சத்தின் மூலையில் பூமி கடுகை கடலாக்காதே. கவிஞர் : பவித்ரா, மூன்றாம் ஆண்டு, EIE.

திசை மாறிய நோக்கம்

    நூறு நாட்கள் நடந்தவை எவையும்   நகக்கண் மதிப்பும் பெறாத போதே   தமக்கென தாமே உள்ளதை                                     உணர்ந்து   நரம்பும் சதையுமாய் மண்ணில் மாய்ந்தனர்     பச்சோந்திப் பறவைகளாய்                           […]

செஞ்சிலுவை.. கல்லறை வரை

யார் யாரோவாய் எங்கிருந்தோ வந்து ஓரறையில் குழுமி புதிய அறிமுகங்கள் கிடைக்க புதன்கிழமைகள் அறிவின் புதிய விடியல்கள் ஆக வருகை பதிவில் துவங்கி வழியனுப்பும் வரை உடனிருக்கும் மூத்தோரே – நீங்கள் எம் சொந்தங்கள்! செய்தும் செய்து முடிக்காமலும் நாங்கள் பங்கேற்ற project review க்கள் எங்கள் YRC அலப்பறைகள் உச்சக்கட்டம்! Camp என்று சொன்னவுடன் ஒதுங்கி ஓடிய பலருக்கிடையில் தேடி வந்த சிலருக்காக எல்லா ஏற்பாடுகளும் எங்கள் மூத்தோர் செய்து வைக்க வேலைகள் கற்றதைவிட நாங்கள்[…]

வாழ்க்கை என்னும் கடற்பயணம்

பயணத்தின் பக்கங்கள் கனவும் கைமீறி போனது -என் கடலும் உள்வாங்கிப் போனது கரைசேருமா என் கப்பலும் கைசேருமா என் நாட்களும் மழையடித்தும் கடும் புயலடித்தும் மனம்தளராமல் தள்ளாடுது என்தேகமும் மனதும் மன்றாடுது, மறம்கொண்டிட மாற்றம் மறைந்தாடுது, நான்சோர்ந்திட சோதனை அவை சாதனையாக்கிட சோகங்கள்பல தாண்டியே வெறியாடுது வெற்றுஇதயம் வெற்றியை வேட்டையாட! கவிஞர்: பிரதாப், இறுதி ஆண்டு, Aerospace Engineering.

நீ மறந்தாய்

  ஓ மானிடா! மனித இனமே மறைந்து போனது,நீ மறந்தாய்; மங்கையின் மானம் மழுங்கி போனது,நீ மறந்தாய்; மண்ணைக் காத்தவன் மண்ணுக்குள்ளே போனானே,நீ மறந்தாய்; மறைமுகமாக வந்து மரபையே அழித்தானே,நீ மறந்தாய்; நீ மறாவாமல் இருப்பது மறதி ஒன்றை மட்டுமே!   கவிஞர்: விஷ்வஜித் ஆகாஷ், இறுதி ஆண்டு, Automobile.

இதயத்தின் ஏக்கங்கள்

  இறைவனே!…இறைவனே!…   என் இருள் இதயமே   உன் இருவிழிகளின் இலக்கா!…   இருட்டினில் இலகிய என் இமைகளும்   ஒளியினால் ஓங்குமா?…   எங்கிலும் ஏகாந்தமே!…   இறுதியில் ஏமாற்றமே!…   ஏக்கங்கள் பல ஏந்தியே   எனது இதயமும் இயங்குது!…   ஏற்றங்களில் என்றாவது எனதுயிர் இசையுமா?…   கவிஞர்: பிரதாப், மூன்றாம் ஆண்டு, Aeronautical.

வாழ்க்கை என்னும் பயணம் – கவிதை

விரும்பியது எல்லாம் நடக்குமா விண்மீன் கையில் கிடைக்குமா வான்கடலில் விண்மீன் பிடிக்க விரும்பினேன் பிரயாணம் நடுவில் தயங்கினேன் – மிகவும் சினந்தேன்-கொஞ்சம் வியந்தேன்-நிறைய வெட்கி குனிந்தேன் -இப்படியும் சில வாழ்வானது ஒன்றே செயலாற்றுவது நன்றே பயணத்தின் தொடக்கம் இதுவே இன்னும் செல்வோம் தூரம் காற்றும் துணை வரும் என்று தொடர்ந்தேன் தேங்காய் நார்களின் கடுமை கண்டேன் தொடர்வண்டிகளின் தொடர்ச்சியாய் புதிய முகங்கள் கண்டேன் அவர்களிடம் உழைப்பை கண்டேன் மழைத் துளிகளின் ஈரம் கண்டேன் துரோகங்கள் கசந்ததை உணர்ந்தேன்[…]